லுலு மால் அசத்தல்.. கோவை ஆடி ஆஃபர்.. 50% சூப்பர் தள்ளுபடி.. ஒரே நாளில் திக்குமுக்காடிய கோயம்புத்தூர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை லுலு மால் மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சியை தந்து, தன்னுடைய வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. அது என்ன?

தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் நகரமான கோவையில், ஏராளமான வணிக வளாகங்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், ஷாப்பிங் மால்கள் நிறைந்திருக்கின்றன.. எனினும், அனைத்துவிதமான வீட்டு பொருட்களும், ஒரே இடத்தில் கிடைக்கக்கூடியதாக இடமாக லுலு ஹைப்பர் மார்க்கெட் திகழ்ந்து வருகிறது.

Lulu Kovai Coimbatore Lulu mall

நம்முடைய மாநிலத்திலேயே முதல் ஹைப்பர் மார்க்கெட், கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது.

பேராதரவு: இந்த லுலு மால் திறக்கப்பட்டு, ஒரு வருடம் கடந்தும்கூட, முதல்நாள் விற்பனை போலவே இப்போதும் நடந்து வருகிறது. இதற்கு காரணம், பொருட்களின் விற்பனையில் அதிரடிகளையும், தள்ளுபடிகளையும் வெளியிட்டு வருவதுதான். அதிலும், பண்டிகை காலங்களில் வெளியாகும் ஸ்பெஷல் ஆஃபர்களுக்கெனவே, கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும்..

கடந்த தீபாவளி பண்டிகைக்கு, 60 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்களுக்கான ஆஃபர் போடப்பட்டது. புதிதாக திருமணமான 50 தம்பதிகளுக்கு அரை கிராம் தங்க காசு பரிசு, அழகு சாதனப்பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடி, விளையாட்டு பொருட்களுக்கும் 50 சதவீத தள்ளுபடி, கோடை வெயிலுக்கு ஏசி பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி என அறிவிப்பதுதான், லுலுவின் ஸ்பெஷலாக இருந்து வருகிறது.

சிறப்பு தள்ளுபடி: அரிசி, பாதாம் போன்ற உணவு பொருட்களுக்கும் திருவிழா என்ற பெயரில் சிறப்பு விற்பனையே நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மால் திறக்கப்பட்டு, ஒருவருடம் முடிந்த நிலையில், "ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஆபர்" என்ற அறிவிப்பு மக்களை வியக்க செய்தது. அத்துடன் 5 நாட்களுக்கு குறிப்பிட்ட பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் ஆடி மாதம் பிறந்துள்ளதால், ஆடி ஆஃபர் இப்போதே வெளியாகி கோவையை திரும்பி பார்க்க வைத்து வருகிறது..!

ஆடி மாதம்: ஆடி மாதம் தொடங்கியிருப்பதால், 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருப்பது. குறிப்பாக தினசரி உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப்பொருட்களுக்கு இந்த தள்ளுபடி சலுகை வழங்கப்பட உள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை இந்த தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இதனால் இன்று காலை முதலே கூட்டம் அலைமோதியபடி காணப்படுகிறது..

ஏற்கனவே லுலு ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டதையடுத்து, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.. வியாபாரிகள் சங்கங்கள் இதுகுறித்த எச்சரிக்கையையும் விடுத்தவாறே உள்ளனர்..

பெரும் வரவேற்பு: அதிலும், அரியிலும் கூட தள்ளுபடியா? என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள்.. தஞ்சாவூரில் அரிசி அரைக்கும் ஆலையும், கோவையிலேயே இன்னொரு லுலு நிறுவனத்தின் கிளை திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.. ஆனாலும் லுலு மால் தள்ளுபடியை அறிவித்தபடியே உள்ள நிலையில், கோவை மக்களும், தங்கள் பேராதரவை வழங்கி கொண்டிருக்கிறார்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+