கோவையில் காதல் திருமணம் செய்த இளம் பெண்.. பலருக்கும் விருந்தாக்கிய முக்கிய குற்றவாளி.. திடுக் தகவல்
கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கணவனை பிரிந்த 18 வயது இளம் பெண்ணை, ஆசை வார்த்தை கூறி மயக்கி பலருக்கு விருந்தாக்கிய பாபு சிவேஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தடுமாற்றமான வயதில் பெற்றோரை ஏமாற்றி காதல் திருமணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பது இந்த செய்தியின் மூலம் அறிய முடியும். 18 வயதே ஆன இளம் பெண் காதல் திருமணம் செய்துள்ளது. காதலித்தவன் சில மாதங்களில் சண்டை போட, பிரிந்து வந்து தனியாக இருந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி இளைஞன் ஒருவன் பலருக்கும் விருந்தாக்கி உள்ளான். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு லட்சுமி பிரிந்துள்ளார். லட்சுமி கணவரை பிரிந்த பின்னர் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்திருக்கிறார்.
கணவனை பிரிந்து லட்சுமி தனியாக வசிப்பதை கண்ட பாபு சிவேஷ் ( வயது 26) என்ற இளைஞர், அவரிடம் ஆறுதலாக பேசி பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் உன்னை நான் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ வைப்பேன். என்னை நம்பி நீ வரலாம் என்ற பல ஆசை வார்த்தைகளை கூறினாராம். இதை உண்மை என நம்பிய லட்சுமி பாபு சிவேஷ்சுடன் மேட்டுப்பாளையத்துக்கு சென்றுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் ராமசாமி நகரில் வாடகை வீடு எடுத்து லட்சுமியுடன் பாபு சிவேஷ் நல்ல பிள்ளை போல் தங்கி உள்ளார். அதன் பின்னர் பாபு சிவேஷ் தனது சுயரூபத்தை காட்டி உள்ளார். ஒரு நாள் தனது நண்பர் ரமேசை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். பின்னர் அவர் இளம்பெண்ணை மிரட்டி 2 பேரும் ஒன்றாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்கள். இதனால் பயந்த இளம்பெண் நடந்த சம்பவங்களை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
பாபு சிவசும் அவரது நண்பர் ரமேசும், மாதக்கணக்கில் வீட்டில் அடைத்து வைத்து லட்சுமியை அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதோடு விடாமல் அந்த லட்சுமியை கோவை மற்றும் ஊட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு அழைத்து சென்று பலருடன் உடலுறவு கொள்ள வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்கள்.
ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் இருந்த இளம்பெண், பாபு சிவேஷிடம் இருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்தார். பின்னர் நடந்த சம்பவங்களை இளம் பெண் லட்சுமி, உறவினர்களிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். இதனை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று லட்சுமி புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய ராகுல், நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரம்பாடியை சேர்ந்த 36 வயதாகும் செந்தில்குமார் ஆகியோரை உடனே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு சிவேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர் பாபு சிவேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பாபுவின் நண்பர் ரமேஷ் என்பவர் உள்பட பெண்ணை பலாத்காரம் செய்த பலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications