‛‛40க்கு 40’’.. சோனியாவை அழைத்து வந்து ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் - திருமா விருப்பம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலினின் வியூகம்தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்று பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மத்தியில் ஆட்சியை அமைத்தது. அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

Mk Stalin Thirumavalavan Coimbatore

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பார்த்தால் திமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. வடமாவட்டங்களான திருவள்ளூர், அரக்கோணம் மத்திய மாவட்டங்களான பெரம்பலூர், கரூர், திருச்சி கொங்கு மண்டலமான கோவை, நாமக்கல், நீலகிரி, தென் மாவட்டங்களான மதுரை, தென்காசி, தூத்துக்குடி ஆகியவற்றில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் திமுக வழக்கத்தை விட அதிக வாக்குகளை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

அதிமுக வலுவாக இருப்பதாக கருதப்படும் மேற்கு மண்டலத்திலும் திமுக அதிக வாக்குகளை வென்றிருக்கிறது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று முப்பெரும் விழா கோவையில் நடபெற்று வருகிறது. இந்த விழாவில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் சிறப்புரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், "தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலினின் வியூகம்தான்" என்று கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலினின் வியூகம்தான். சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+