தவெகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டது.. அந்த சின்னத்தை பார்த்து நாடே வியக்கும்! செங்கோட்டையன் சஸ்பென்ஸ்
ஈரோடு: தவெகவுக்கு விரைவில் சின்னம் கிடைக்கப் போகிறது என்றும், அந்த சின்னத்தை பார்த்து நாடே வியப்படைய போகிறது என்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தன்னை யாராலும் சாய்க்க முடியாது என்று கூறிய செங்கோட்டையன், சாய்க்க நினைத்தவர்கள் சாய்ந்து போவார்கள் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின், மேற்கு மண்டல பொறுப்பாளராக பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இன்று காலை ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த காவல் நிலையத்தில் கடிதம் அளித்திருந்தார்.

இதையடுத்து மாற்று இடத்தை தேர்வு செய்து கொடுக்குமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள செங்கோட்டையன், டிசம்பர் 16ல் ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்று மாலை ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் மக்களை சந்தித்தார்.
அப்போது செங்கோட்டையன் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, பெரிய கட்சி நம்மிடத்தில் வந்துவிட்டது.. அங்கே கொடி அசைத்து கொண்டிருக்கிறார்கள்.. பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றார்.. ஆனால் இப்போது பிள்ளையார் சுழி போடவில்லை.. வேறு சுழி போடப்பட்டிருக்கிறது. எல்லோரின் முதுகிலும் ஏறி சவாரி செய்யலாம் என்று சிலர் கனவு கண்டார்கள்.
ஆனால் மக்களின் சக்தி விஜய்யை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வைப்பார்கள். மக்கள் சக்திக்கு யாராலும் தடை போட முடியாது. இந்த கிராமத்தில் கூடிய கூட்டம் போல், விஜய்க்கு ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டம் கூடுகிறது. ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரை விஜய்க்கு வாக்கு போட சொல்கிறார்கள். ஆண்ட கட்சிகளே தான் ஆள வேண்டுமா? மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா?
ஏன் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாது? நல்லாட்சியை கொடுக்கக் கூடிய புதிய முகத்தை மக்கள் தேடிக் கொண்டே இருந்தார்கள்.. அந்த முகம் கிடைத்துவிட்டது.. என்னை யாராலும் சாய்த்துவிட முடியாது.. சாய்க்க நினைப்பவர்கள் சாய்ந்து போவார்கள்.. நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான்.. மிக விரைவிலேயே தவெகவுக்கு சின்னம் கிடைக்கப் போகிறது.
அது எனக்கு நன்றாக தெரியும்.. ஆனால் வெளியில் சொல்லக் கூடாது.. அந்த சின்னத்தை பார்த்த பிறகு தான் நாடே வியப்படைய போகிறது.. அஞ்சப் போகிறது.. ஏனென்றால் இந்த சின்னத்தை வெல்வதற்கு இனி தமிழ்நாட்டில் எந்த இயக்கத்தாலும் முடியாது என்று தெரிவித்துள்ளார். தவெக சார்பாக கடந்த மாதமே தேர்தல் ஆணையத்தில் சின்னம் கோரி விண்ணப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்












Click it and Unblock the Notifications