கோவை கருமத்தம்பட்டியில் "கலெக்டர் உமாநாத் காலனி".. 30 ஆண்டு கால கனவை நனவாக்கியவர் யார் இந்த உமாநாத்?
கோவை: பட்டா வழங்கியதற்கு விசுவாசமாக குடியிருப்பிற்கு முதல்வரின் தனிச் செயலாளர் பெயரை வைத்து அசத்திய கருமத்தம்பட்டி மக்கள்.
Recommended Video
பொதுவாக குடியிருப்புகள், தெருக்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்கள், தியாகம் செய்த அரசியல்வாதிகளின் பெயர்கள் வைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள கிராம மக்கள் என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?

குடியிருப்பு பகுதி
கருமத்தம்பட்டி அருகே தங்கள் குடியிருப்பு பகுதிக்கு, தற்போது முதல்வரின் தனிச் செயலாளராக இருக்கும் உமாநாத்தின் பெயரை சூட்டியுள்ளனர். வாங்க ஏன் என்பதற்கான காரணத்தை அறிவோம். கருமத்தம்பட்டியை அடுத்த சென்னியாண்டவர் கோயில் அருகே உள்ள விராலிக்காடு கிராமம்.

குடும்பத்தினர்
இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஆனால் இவர்கள் ஒருவருக்கும் பட்டா என்பதே கிடையாது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு எழுதி கொடுத்தும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை.

குடும்பத்தினருக்கு பட்டா
பல கட்ட போராட்டங்களை இந்த கிராம மக்கள் நடத்தி பார்த்தனர். இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு கோவைக்கு ஆட்சியராக உமாநாத் வந்தார். இவரை 2010-ஆம் ஆண்டு இப்பகுதி மக்கள் சந்தித்து பட்டா கேட்டு மனு கொடுத்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த உமா நாத் 80 குடும்பத்தினருக்கும் பட்டா கொடுத்தார்.

நன்றி விசுவாசம்
இதனால் இந்த ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குடியிருப்புக்கு கலெக்டர் உமாநாத் காலனி என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அனைத்து ஆவணங்களிலும் இந்த பெயரையே பயன்படுத்தி வருகிறார்கள். ஆட்சியருக்கு நன்றி விசுவாசம் காட்டும் விதமாக அவரது பெயரை குடியிருப்புக்கு வைத்துவிட்டதாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications