தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு
கோவை: கோவை மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.
கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வைட்டமின் 'ஏ' ஆரோக்கியமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. இது மட்டும் அல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும்.

இந்த சத்து குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இவற்றுக்கு தக்க சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டு தேசிய அளவில் ஆண்டுக்கு இருமுறை வைட்டமின் ஏ திரவம் நாடு முழுவதும் 6 மாதம் முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் இந்த முகாமானது வருகிற இன்று முதல் 25-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது.
இந்த முகாம்களில் பொது சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறைகளை சார்ந்த கணப்பணியளாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த முகாமின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 740 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவத்தை அளித்து கண் பார்வை குறைபாடில்லாத இளைய சமுதா யத்தினரை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications