என்ன ஓவரா சவுண்ட் விடற.. கேள்வி எழுப்பிய தன்னார்வலரை மிரட்டிய நிர்வாகி.. அண்ணாமலை மாநாட்டில் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேறி வீ த லீடர்ஸ் என்கிற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். அந்த இயக்கத்தின் முதல் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் விவிஐபிகளுக்கான இட ஒதுக்கீட்டில், பாஜக முன்னாள் நிர்வாகிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய தன்னார்வலரிடம், பாஜக முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அநாகரிகமான வார்த்தைகளில் திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், அண்ணாமலை தொடங்கியுள்ள வீ த லீடர்ஸ் இயக்கத்தை முதல் மாநாடு நடைபெற்றது. நேர்மையான, நாகரீகமான அரசியலை வெளிப்படுத்துவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் இந்த கூட்டத்திலும் ஏராளமான சர்ச்சைகள் வெடித்துள்ளது. கோவை பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அண்ணாமலை இயக்கத்தில் இணைந்துள்ளார்.

volunteer-threat-by-former-bjp-cadre-annamalai-maanaadu-controversy

அதெல்லாம் நீ கேட்காத

நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். விவிஐபி இருக்கைகளில் பெரும்பாலும் பாஜகவில் இருந்து விலகிய இணைந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு தான் அதிகம் இடம் ஒதுக்கப்பட்டது. ஏராளமான தன்னார்வலர்கள் அந்த இயக்கத்தில் இணைந்து வரும் நிலையில், ஒரு தன்னார்வலர், "புதியவர்களுக்கு மதிப்பு தராமல், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கு மட்டும் விவிஐபி இருக்கையில் அமர வைப்பது ஏன் என்று பாலாஜியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

"அந்த பக்கம் எல்லா தன்னார்வலர்களும் உக்காந்துட்டு இருக்காங்க. நீ அந்த பக்கம் போய் உக்கார வேண்டியது தானே. நீ ஏன் இங்க வந்து நிற்க வேண்டியது தானே. இதைப்பத்தி எல்லாம் நீ கேட்காதே. நான் கேட்டபதற்கு நீ பதில் சொல்லு. உன்னை அப்படியே உரிச்சு தொங்க விட்டுருவேன். ஆள் நிற்பதற்காக ஓவரா சவுண்ட் விடுவியா" என்று கேட்டு தகாத வார்த்தைகளில் திட்யுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னார்வலர்கள் அதிருப்தி

அரங்கில் அமர்ந்திருந்த வீ த லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்த சில நிர்வாகிகள், தங்களுக்கு அமர வைக்கப்பட்ட இடத்தில் இருந்து பார்த்தால் மேடை சரியாகத் தெரியவில்லை எனக் கூறி ஒருங்கிணைப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு இருந்த மற்ற ஒருங்கிணைப்பாளர்களிடம், "மேடையே தெரியாத இடத்தில் ஏன் எங்களை உட்கார வைத்தீர்கள். பிறகு எதற்காக எங்களை இந்த மாநாட்டுக்கு தேடி வந்து அழைத்தீர்கள்" என்று வாக்குவாதம் செய்தனர்.

இந்த நிகழ்வுகளால் அண்ணாமலை இயக்கத்தின் மாநாட்டிற்கு சென்ற தன்னார்வலர்கள் மிகவும் அதிருப்தியடைந்தனர். இதுதான் வீ த லீடர்ஸ் இயக்கத்தினர் புதிய தன்னார்வலர்களுக்கு கொடுக்கும் லட்சணமா. இந்த லட்சணத்தில் தான் இவர்கள் புதிய தலைவர்களை உருவாக்க போகிறார்களா. தன்னார்வலர்களிடம் பாலாஜி உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+