பிஎஸ்ஜி கல்லூரியில் ராகிங்: ஜூனியர் மாணவரை தாக்கி நிர்வாணமாக புகைப்படம்! அறை எண் 40ல் நடந்தது என்ன?
கோவை: கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் அறை எண் 401 இல் நடந்தது என்ன என்பது குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன.
கோவை அவினாசி சாலையில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயது மாணவர். இவர் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்.

இவருடைய அறை எண் 225 ஆகும். இங்கு சில சீனியர் மாணவர்கள் சென்றுள்ளனர். பின்னர் அந்த திருப்பூர் மாணவரை சீனியர் மாணவர்கள் தங்கியிருக்கும் 401 ஆவது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினாராம்.
இதனால் கோபமடைந்த அந்த சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் காலை 5.30 மணிக்கு வரை அறையில் அடைத்து வைத்து அந்த மாணவரை தாக்கி நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் ரேசரை கொண்டு தலையில் மொட்டை அடித்துள்ளனர். இதையடுத்து விடுவிக்கப்பட்ட அந்த 18 வயது மாணவர் நடந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
உடலில் உள்ள காயங்களை பார்த்த பெற்றோர் பதறி போய் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் சமாதானம் செய்ய முயற்சித்தனர். இதையடுத்து பெற்றோர் சமாதானத்தை ஏற்க மறுத்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் இரண்டாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்தது உறுதியானது. விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் தரணிதரன், வெங்கடேஷ், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் மாதவன், மணி , நான்காம் ஆண்டு படிக்கும் ஐயப்பன், சந்தோஷ், யாலிஸ் ஆகிய 7 பேரை பீளமேடு போலீஸார் கைது செய்தனர்.
அவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 7 பேரை கைது செய்த போலீஸார் மற்றொரு மாணவரை தேடி வருகிறார்கள். ராகிங் செய்யப்பட்ட மாணவனின் உடலில் இருக்கும் காயங்கள் வெளியாகியுள்ளன. அதில் உடலில் ஆங்காங்கே ரத்தம் கட்டியது போல் காயங்கள் சிவப்பாக உள்ளன. முதுகுபகுதியில் ஏதோ கூர்மையான ஆயுதங்களால் கீறியது போல் இருக்கிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications