கோவையில் மதுபோதையில் இருந்த நண்பனுக்கு வண்டியை ஓட்டிப்பழக விட்டதால்.. மைத்துனிக்கே எமனாகிய டிரைவர்
கோவை: கோவையை அடுத்த கோவைப்புதூர் அருகே உள்ள திரு வி.க. நகரை சேர்ந்த பாலன் என்பவருடைய மனைவி சாவித்திரி.இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் சவுமியா என்ற மகளை மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது தாயுடன் நடந்து சென்ற மகளுக்கு எங்கிருந்தோ வந்த சரக்கு வாகனம் மோதியது. நண்பனுக்கு ஓட்டிப்பழக வண்டியை கொடுத்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
கோவையை அடுத்த கோவைப்புதூர் அருகே உள்ள திரு வி.க. நகரை சேர்ந்த பாலன்- சாவித்திரி தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.பாலன் கோவை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதில் ஒரு மகள் தான் சவுமியா.இவர் உக்கடம் கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சாவித்திரி தான், தினமும் காலையில் தனது மகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு மாலையில் அவரை வீட்டுக்கு அழைத்துச்செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி சாவித்திரி நேற்று முன்தினம் காலையில் தனது மகளை பள்ளிக்கூடத்தில் விட்டார். பின்னர் மாலையில் அவரை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக தனது மகளுடன் நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் சவுமியா மீது வேகமாக மோதியது. இதில் அந்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட அவர் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டார். இந்த விபத்தில் சவுமியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இதில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனம் பலியான சவுமியாவின் அக்காள் காவியாவின் கணவர் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
மதுபோதையில் இருந்த ராஜேந்திரன் தனது நண்பர் கண்ணன் (அவரும் போதையில் இருந்தாராம்) என்பவருக்கு வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்ததும், ஓட்டுனர் உரிமம் இல்லாத கண்ணன் அந்த சரக்கு வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தின் உரிமையாளரான ராஜேந்திரன், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிய கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications