பிம்பிள்ஸும், நிர்வாண வீடியோவும்.. இப்படியெல்லாம்கூட நடக்குமா.. கோவையை அதிர வைத்த இளைஞர்
மனைவியின் நிர்வாண படங்களை காட்டி மிரட்டி உள்ளார் கணவர்
கோவை: மனைவியின் நிர்வாண படங்களை காட்டியே மிரட்டி டார்ச்சர் தந்துள்ளார் கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர்.. இது தொடர்பாக 4 பேர் கைதாகி உள்ளனர்.
துளிகூட மேக்கப் இல்லாமலேயே ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி... ஒருமுறை இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தபோது, அழகு பற்றி விளக்கம் தந்தார்.
"என் முகத்தில் நிறைய பருக்களுடன் படங்களில் நடித்தேன். அப்படி இருந்தும் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள். நம்பிக்கை தான் உண்மையான அழகு என்பதை தெரிந்து கொண்டேன்.. பெண்கள் அழகுக்காக ஒப்பனை செய்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

இயற்கை அழகு
மாறாக பெண்கள் தங்கள் இயற்கையான அழகுடன் வலம் வந்தாலே போதும்.. அந்த அழகு அனைவராலும் வசீகரிக்கப்படும்.. இயற்கையான அழகுக்கு கிடைக்கும் அங்கீகாரமானது பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்" என்று கூறியிருந்தார்... இப்படி எத்தனை நடிகைகள் சொல்வார்களோ தெரியாது.. பிரேமம் படத்தில் நடித்தபோது இவருக்கு ஏராளமான முகப்பருக்கள் இருந்திருக்கின்றன.. அவற்றை நீக்கிவிட்டு நடிக்க விரும்பியபோது, அப்படத்தின் டைரக்டர் அல்போன்சா 'அதெல்லாம் தேவையில்லை, இயற்கைதான் நிஜ அழகு என்று சொல்லி நடிக்க வைத்துள்ளார்.

கோவை பெண்
இன்றைய காலகட்டம் இப்படி இயற்கைக்கு திரும்பி கொண்டிருக்கும் சூழலில் கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. கோவை காந்திபுரம் முதலாவது எக்ஸ்டென்சன் தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து.. 32 வயதாகிறது.. சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார்.. இவருக்கும் கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

டார்ச்சர்
மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணின் பெற்றோர் சீதனமாக 51 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கம் கொடுத்து தடபுடலாக இந்த திருமணத்தை செய்து வைத்தனர்... இந்நிலையில், பிச்சைமுத்துவின் மனைவியின் முகத்தில் நிறைய முகப்பருக்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது.. இதற்கான சிகிச்சையை மனைவி எடுத்துக் கொண்டாரா? அல்லது இயல்பாகவே அப்படியே விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை.. மனைவியின் முகத்தில் முகப்பரு இருந்ததால் அவரிடம் வெறுப்பை காட்ட ஆரம்பித்துள்ளார் பிச்சைமுத்து.

தகராறு
நாளடைவில் இவர்களுக்குள் நிறைய தகராறு வந்து போயுள்ளது.. ஒருகட்டத்தில், முகப்பரு இருப்பதாலேயே, மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார்.. அப்படி மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் பெற்றோர் வீட்டுக்கு சென்று தனது பெயரில் சொந்த வீடு வாங்கி தருமாறு மனைவியை டார்ச்சர் செய்துள்ளார்... இதற்கு பிச்சைமுத்துவின் குடும்பமே உடந்தையாக இருந்துள்ளது.. மாமனார் செல்லதுரை, மாமியார் ஜெயலட்சுமி, மச்சினர் என அப்பெண்ணை சித்ரவதை செய்துள்ளனர்.

நிர்வாண போட்டோக்கள்
மனைவியின் நிர்வாண படத்தை செல்போனில் காட்டி, பிச்சைமுத்து அவரை டார்ச்சர் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டார்.. அடித்து உதைத்துள்ளார்.. இதில் காயமடைந்த அந்த பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு அவரது அம்மா வீட்டுக்கு அழுது கொண்டு சென்று விட்டார்... இறுதியில், நடந்த சம்பவம் குறித்து கோவை மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில், போலீசார் தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிச்சைமுத்துவை கைது செய்தனர். உடந்தையாக இருந்த செல்லதுரை, ஜெயலட்சுமி, மகேஸ்வரி, முத்துக்குமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications