பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் உமாவை பாத்தீங்களா? அப்படியே இடிஞ்சு போய் உட்காந்துட்டார் கோவை தணிகாசலம்
கோவை: திருமணமாகி ஒரு மாதம் கழித்து, தலையில் இடி விழுந்தது போல் உட்கார்ந்துள்ளார் தணிகாசலம்.. என்னவாம்? என்ன நடந்தது அவருக்கு?
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரை சேர்ந்தவர் தணிகாசலம்.. இவருக்கு 43 வயதாகிறது.. ஃபிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு புகாருடன் வந்தார்.. அந்த புகாரில் உள்ளதாவது:

"நான் தனியார் நிறுவனத்தில் ஃபிட்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு அண்ணன் மற்றும் தம்பி இருக்கிறார்கள். எனக்கு 43 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
திருப்பூர்: இந்தநிலையில் எனக்கு தங்கை முறையான திருப்பூரை சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் மூலம் மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர் தனலட்சுமி என்பவர் அறிமுகமானார். அவரிடம் எனக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்க்கும்படி சொன்னேன்.
அதற்கு அவர், பெண் ஒருவர் இருப்பதாகவும், புரோக்கர் கமிஷனாக ரூ.3.50 லட்சம் பணம் தர வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நானும் ரூ.3.50 லட்சம் பணத்தை புரோக்கர் தனலட்சுமியிடம் கொடுத்தேன். கடந்த 21-ந்தேதி எனக்கும், 30 வயது பெண் ஒருவருக்கும் திருப்பூர் அவினாசி நகர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. பிறகு நான் மணப்பெண்ணுடன் வீட்டிற்கு சென்றேன்.
திருமணம்: நேற்று மதியம் கோவிலுக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தேன். அப்போது நான் திருமணம் செய்த பெண், என்னிடம் வந்து தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக தெரிவித்தார். மேலும் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த புரோக்கர் தனலட்சுமி, ரூ.20 ஆயிரம் பணம் தருவதாக சொல்லி இந்த திருமணத்தை செய்து வைத்ததாகவும் கூறினார்.
இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். எனவே எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார். இந்த புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியிருக்கிறார்கள். இந்த சம்பவமும், தணிகாசலம் தந்த புகாரும் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மிஸ்ஸிங்: ஆனால், தனக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தையே, கல்யாண பெண் ஒரு மாதம் கழித்து, சாவகாசமாக நேற்றுதான் சொல்லியிருக்கிறார்.. இந்த ஒரு மாத காலம் அவர் ஏன் அமைதியாக இருந்தார்? அந்த பெண் சொல்வது உண்மையா? என்றெல்லாம் தெரியவில்லை.. போலீசார்தான் இது தொடர்பான உண்மையை வெளிக்கொணர வேண்டும்.. ஆனால் இப்ப தனலட்சுமியை காணோமாமே..!!












Click it and Unblock the Notifications