சுட்டுத்தள்ள உத்தரவு.. மே 13 ஆம் தேதி வரை இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு - கொந்தளிப்பில் மக்கள்
கொழும்பு: இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்ந்து வரும் நிலையில் மே 13 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தவறான பொருளாதார கொள்கை
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.

பணமின்றி தவிக்கும் இலங்கை
மேலும் அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்க உலக நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் வழங்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 70 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. கடந்த மார்ச் மாதம் இலங்கையிடம் கையிருப்பில் இருந்த தொகை வெறும் 1.93 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இதன் மூலம் இலங்கையால் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாது.

தொடரும் போராட்டம்
இலங்கை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் இலங்கை அரசுக்கு எதிராக தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். கோ கோட்டா என்ற முழக்கத்துடன் ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்கள் போராடி வருகின்றனர்.

கலவரமயம்
இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ராஜபக்ஷேவின் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின.

தலைமறைவான மகிந்த ராஜபக்ஷே
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவாகினார். பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீட்டை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களையும் இலங்கை மக்கள் தகர்த்து வருகின்றனர். தப்பிச்சென்ற மகிந்த ராஜபக்ஷே இலங்கை திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் நிறுத்தம்
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் அரசு இடங்கள், ராஜபக்ஷேக்களின் சொத்துக்களுக்கு தீ வைத்து வருவதால் எரிபொருள் விநியோகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இலங்கை எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறி வருவதால் வீணாவதை தடுக்கவும், வன்முறைகளை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு நீட்டிப்பு
இலங்கையில் பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் நேற்றிரவு தீவிர ஊரடங்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 13 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை வெளியில் செல்லலாம் என்றும் அனுமதியளிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சுட்டுத்தள்ள உத்தரவு
அதே நேரம் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவோர் பொதுசொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ள பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. நேற்று வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் ஆங்காங்கே சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதுவரை போலீசார் நடத்திய தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications