தமிழக மீனவர்கள் 13 பேர் கைது.. பிப்.10 வரை நீதிமன்றக் காவல்.. இலங்கை நீதிமன்றம் போட்ட உத்தரவு!
கொழும்பு: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும், பிப்.10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரகம் மீனவர்கள் கைது செய்யப்படாமல் தடுக்க, நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று கூட 34 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தற்போது அடுத்த 2 நாட்களில் மீண்டும் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரைக்காலில் இருந்து 2 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். அதில் நெருந்தீவு அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 மீனவர்களையும் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் தெரிய வந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது.
திடீரென மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இலங்கைக்கான இந்திய தூதரையும் மீனவர்களை சந்தித்து சம்பவம் குறித்தும் கேட்டறிந்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்று, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய மீனவர்கள் 13 பேரையும் பிப்.10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications