அநுரகுமார சொன்ன பொய்கள்.. டிரெண்ட்டாகும் அதிபரின் டிவி பேட்டி.. போட்டு உடைத்த சில்வா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நிறைவேற்றவே முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்துவிட்டார் என்று அந்நாட்டுப் பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி சில்வா ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி இலங்கையில் புதிய அதிபராக அநுரகுமார திஸாநாயக்க பதவி ஏற்றார். இன்னும் சரியாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்கு இலங்கை அரசியல் களம் சூடு பிடித்து எரிய தொடங்கி இருக்கிறது. ஐக்கிய மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

sri lankan anurakumar dissanayake

நேற்று அவர் அளித்த ஒரு பேட்டியில், “ஆரம்பத்தில் அதிபர் அநுரகுமார அரசங்கத்தைச் சார்ந்த குழுவினர் எக்காரணத்தைக் கொண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணையச் செயல்பட மாட்டோம் என்று கூறிருந்தனர். ஐஎம்எஃப் உடன் இணைந்தால் நாடு எந்த வகையிலும் உயர்வடைந்தது இல்லை. எனவே சேரமாட்டோம் என்றனர். ஆனால், சர்வதேச நாணய நிதியம் கூட்டத்தில் அனைத்திற்கு தலையாட்டி ஒப்புதல் அளித்துள்ளது அநுரகுமாரா அரசு. இந்த அரசால் எதையும் மாற்ற முடியாது. மாற்றவும் சொல்ல மாட்டார்கள்” என்று பேசியிருந்தார்.

இந்த விவகாரம் நேற்று முதல் இலங்கை மக்கள் மத்தியில் ஒருவித விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து அநுர அதிபராகிவிட்டாரா என்று சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. உண்மையில் இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது? சிங்கள மொழியில் ஹர்ஷ டி சில்வா அளித்துள்ள பேட்டி பற்றி ஒரு விரிவான வீடியோவை இலங்கையின் யூடியூபர் ஆர்ஜே சந்துரு வெளியிட்டுள்ளார். அவர் பதிவேற்றியுள்ள காணொளியில், “சர்வதேச நாணயத்துடனான உடன்படிக்கையில் மாற்றம் கொண்டு வருவோம். வரி சுமைகளைக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துதான் அநுர அதிபராகத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஆனால், கடந்த சில நாட்கள் முன்னதாக சர்வதேச நாணயத்துடனான உடன்படிக்கை குறித்து ஒரு கூட்டம் கிட்டத்தட்ட 2 நாட்களாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பழைய உடன்படிக்கையில் ஒரு எழுத்தைக் கூட மாற்றாமல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காகவா இந்தப் புதிய அரசுக்கு மக்கள் வாக்களித்தனர்? அதை வைத்துத்தான் ’இந்த அரசாங்கம் சொன்னது எதுவுமே நடக்காது. மக்களுக்குச் சொன்னது ஒன்று, செய்வது வேறு’ என்று சில்வா கூறியிருக்கிறார். நான் எடுத்த பேட்டியில் கூட இதையேதான் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார். அது இப்போது இலங்கை அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக மாறி இருக்கிறது” என்கிறார்.

தொடர்ந்து பேசிய சந்துரு, “இப்போது 1 லட்ச ரூபாய் வரை மக்கள் வரி கட்டுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதை 2 லட்சமாக உயர்த்த போகிறோம் என்று அநுர தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். அடுத்துப் பாடப்புத்தகங்கள் சார்ந்த பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் அனைத்திற்கும் முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆறுமாதத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு அளிக்கப்படும் என்றும் பேசினார்.

இத்தனை வாக்குறுதிகளை அளித்த அநுர, சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டத்திற்குப் போகும்போது வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் கிழித்து எறிந்துவிட்டு, உள்ளே போனதும் அனைத்து ஒப்பந்தத்திற்கும் 'ஓகே’ என்று தலையை ஆட்டிவிட்டு வந்துள்ளனர். அதற்காகவா மக்கள் வாக்களித்தனர் என்ற கேள்வியை ஹர்ஷ டி சில்வா இப்போது எழுப்பி இருக்கிறார். ஆக, தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதிகள் யாவும் நடப்பதற்காகச் சாத்தியங்களே இல்லை. அவை பொய்யான வாக்குறுதிகள்” என்று கூறியுள்ளார்.

இப்படி எல்லாம் அநுர வாக்குறுதி அளித்தரா? என்பதற்கான ஆதாரத்தையும் சந்துரு தன் வீடியோ பதிவில் இணைத்துள்ளார். தேர்தல் பரப்புரையின் போது அநுர ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களுக்கும் வரி விலக்கு தருவோம் என்றும் ஒரு லட்சம் வரை உள்ள வருமான வரியை 2 லட்சமாக உயர்த்துவோம் என்றும் பேசி இருக்கிறார்.

இதை அப்போதே சில்வா நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகள் என விளக்கிப் பேசி இருக்கிறார். ஆனால், கவர்ச்சியான இந்த வாக்குறுதியை வாக்காளர்களை அதிகம் ஈர்த்துள்ளது. ஆனால், அதன்படி இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு நடத்த முதல் கூட்டத்தில் பழைய ஒப்பந்தம் சின்ன மாற்றம் இல்லாமல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் பிரச்சினை வெடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+