கடல் சீற்றம்..மோசமான வானிலை..கடலுக்குள் செல்ல வேண்டாம்..கடலூர் மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
கடலூர்: மோசமான வானிலை காரணமாக கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடலூரில் வசிக்கும் மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.கடல் காற்று 55-65கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்ததால் மீன்வளத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. பைபர்ஜாய் புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. அரபிக்கடல் பகுதிகளிலும் வங்கக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடல் காற்று 55-65கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடலூரில் மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடல் காற்று 55-65கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்ததால் மீன்வளத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாதென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.
ஜூன் 1ஆம் தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது. இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications