கடலூரில் "அந்தரத்தில்" தொங்குச்சாமே.. மிட்நைட்டில் ஊசலாடிய 40 உயிர்கள்.. கண்விழித்து பார்த்தால்???

Subscribe to Oneindia Tamil

கடலூர்: அரசு பஸ் ஒன்று அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, கடலூரே அதிர்ந்து போய்விட்டது.. என்ன நடந்தது நள்ளிரவில்?

சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று கிளம்பி சென்றது.. கிட்டத்தட்ட 40 பேர் அதில் பயணம் செய்தனர். வீரமணி என்பவர் இந்த பஸ்ஸை ஓட்டினார். இவருக்கு 45 வயதாகிறது.

Cuddalore incident and 40 passengers rescued after breaking the glass in the Tamil Nadu Government Bus

இந்த பஸ் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் குறுக்கு சாலை வெள்ளாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது..

நள்ளிரவு என்பதால், பயணிகள் எல்லாருமே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், அந்த பாலத்தின் தடுப்பு சுவர் மீது பலமாக பஸ் மோதியது... சிறிது தூரத்துக்கு தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு சென்று, பஸ்சின் முன்பகுதி மட்டும் பாலத்தில் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றுவிட்டது.

அந்தரத்தில் பஸ்: பாலத்தில் பஸ் இடித்துவிட்டதை அறிந்து, தூங்கி கொண்டிருந்த பயணிகள் எல்லாம் அலறி கூச்சல் போட்டார்கள்.. இதனால், பஸ்ஸை விட்டு வெளியே வர முயன்றார்கள்.. அந்த பாலத்திலேயே அந்தரத்தில் பஸ் தொங்கிக்கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தார்கள்.. இதனால் மேலும் பயத்தில் கூச்சல் போட்டார்கள்.. முன்பக்க படிக்கட்டு பாலத்தில் அந்தரத்தில் தொங்கியபடியே இருந்ததால், அவர்களால் உடனடியாக கீழே இறங்கி வரவும் முடியவில்லை.

பதற்றத்தில் கூச்சலிட்டபடியே இருந்தனர்.. இந்த அலறல் சத்தத்தை கேட்டு, பாலத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள், பதறியடித்து கொண்டு வந்தார்கள்.. பஸ் பாலத்தில் தொங்கியதால், அவர்களால் உடனடியாக பஸ்ஸில் ஏறி செல்ல முடியவில்லை. எனினும், பஸ்சின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, பயணிகளை வெளியே மீட்டனர்.

பரபரப்பு: அதற்குள் தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் விரைந்து வந்து, பயணிகைளை பத்திரமாக மீட்டனர். பஸ் கீழே விழுந்திருந்தால், மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, மாற்று பஸ் மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்பு வாகனத்தை கொண்டு வந்து, அந்தரத்தில் தொங்கியபடி நின்ற பஸ்சையும் போலீசார் மீட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு
கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+