கடலூரில் கொத்தனாருடன் மலர்ந்த காதல்.. தலையில் இடி இறக்கிய மனைவி.. கடைசியில் நடந்த கிரேட் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil
கடலூர்: குடும்ப உறவுகள் நாளுக்கு நாள் சிதைந்து வருகின்றன.. இதனால் குடும்பம் பிரிவதுடன், உலகமறியாத அப்பாவி குழந்தைகளும் சேர்ந்து அவதிக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. தங்களுடைய வாழ்க்கையை பற்றி மட்டுமே சுயநலமாக முடிவெடுக்கும் தம்பதிகள், குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி யோசிப்பதுமில்லை, அதைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படுவதுமில்லை.. இங்கே கடலூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அந்த குழந்தைகள் தன்னுடைய தாயை பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? என்றே தெரியவில்லை.. அந்த கணவரின் நிலைமையோ, அதைவிட பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது தெரியுமா?

2 நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள கங்கனாடி டவுன் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு 35 வயதாகிறது... இவரது கணவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.

டார்ச்சர் செய்த கணவர்

இவர் கொத்தனார் வேலைக்கும் போகாமல், மனைவியை வைத்து சம்பாதிக்க நினைத்தார்.. இதற்காக வலுக்கட்டாயமாக பிறரிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி டார்ச்சர் செய்துள்ளார்.. இதனால், கணவர் சொன்னதை கேட்கும் நெருக்கடிக்கு ஆளானார்.வேறு ஒருநபருடன் தன்னுடைய மனைவி உல்லாசமாக இருக்க செய்து, அதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து, மிரட்டவும் துவங்கினார் கொத்தனார் கணவர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், காவூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் தனக்கு தெரிந்த சந்திரநாயக் என்ற போலீசாரிடம் சென்று கண்ணீருடன் , நடந்த சம்பவத்தை சொன்னார்..

கொத்தனார் கணவர் கொடுமை

உடனே அந்த போலீஸ்காரர், கொத்தனார் கணவரிடன் செல்போனை பிடுங்கி, அதில் பதிவாகியிருந்த ஆபாச வீடியோவை அழித்தார். ஆனால் சந்திரநாயக், அந்த பெண்ணின் கணவரின் அனுமதியுடனே, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், தனக்கு தெரிந்த நண்பர்கள் சிலருடனும் உடலுறவில் இருக்க சொல்லி பெண்ணை கட்டாயப்படுத்தியிருக்கிறார். இறுதியில் இதன்மூலம் லட்சக்கணக்கில் சந்திரநாயக் சம்பாதித்தும் உள்ளார்..

ஒருகட்டத்தில் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புக்குள்ளான அப்பெண், இதுகுறித்து கங்கனாடி போலீசில் புகார் அளித்தார்.. இதற்கு பிறகுதான், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் கர்நாடகாவில் நிலவி கொண்டிருக்கிறது.

காட்டுமன்னார்கோவில் தம்பதி

இப்படிப்பட்ட சூழலில், நம்முடைய கடலூர் மாவட்டத்தில், இதற்கு நேர்மாறான சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது.. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது பழஞ்சநல்லூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் தம்பதி ஜெகத்குரு - வனிதா.. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்களாகின்றன.வனிதாவுக்கு இப்போது 29 வயதாகிறது.. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவ ஜெகத்குரு, ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வனிதா, தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு, பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது, வனிதாவிற்கும், பிரபாகரன் என்ற கொத்தனாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக கனிந்தது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய கணவர்

இதற்கு நடுவில் கோபித்துக்கொண்டு போன மனைவியை சமாதானம் செய்து அழைத்து வரலாம எனறு ஜெகத்குரு, மாமியார் வீட்டுக்கு சென்றார்.. ஆனால், அங்கு வனிதாவை காணவில்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகத்குரு, பல இடங்களில் மனைவியை தேடினார்..எங்கேயும் மனைவி கிடைக்காத நிலையில், காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு பதறிக்கொண்டே ஓடினார்..

தன்னுடைய மனைவியை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறு புகார் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின் பேரில் விசாரணையை நடத்தினார்கள்.. அப்போதுதான், வனிதா, கொத்தனார் பிரபாகரனுடன் வசித்து வருவது தெரியவந்தது.

நிலைகுலைந்த கணவர்

இதுகுறித்து போலீசார் வனிதாவிடம் பேசியதற்கு, காதலன் பிரபாகரனுடன்தான் வாழ்வேன் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.. இதைக்கேட்டு நிலைகுலைந்து போனார் ஜெகத்குரு.. மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்லலாம் என்று வந்தவர், அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்..

பிறகு போலீசாரிடம், மனைவிக்கு யாருடன் வாழ பிடிக்கிறதோ அவருடனே மகிழ்ச்சியாக வாழட்டும் என்று சொல்லிவிட்டார்.. அத்துடன், மனைவியை வாழ்த்தி விட்டு, கொத்தனார் பிரபாகரனுடன் அனுப்பி வைத்தார்... பிறகு தன்னுடைய 2 மகன்களை அழைத்துக்கொண்டு ஜெகத்குரு கண்ணீர் மல்க சொந்த ஊருக்கு புறப்பட்டார்....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+