கடுமையான இதய நோயால் போராடும் தந்தையை இழந்த 11 வயது சிறுவனுக்கு உதவுங்கள்!
கடலூர்: சிறு வயதில், தந்தையை இழந்து தவித்து வரும் 11 வயது சிறுவன் கபிலன் தற்போது கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது தாய், மனநல பாதிப்பால் தவித்து வருவதால், உயிரை காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி உங்களை அணுகியுள்ளார்.
கபிலன், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன். கலெக்டராக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் கபிலனின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்னைகள். அவனது தந்தை சிறுநீரக பாதிப்பால் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். குடும்பத்தை ஒற்றை ஆளாய் இருந்து காப்பாற்றியது அவர்தான். ஆனாலும், அவரது உயிரை அவராலேயே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்றைய சூழலில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சரி செய்யும் அளவுக்கு சாமானிய மக்களிடம் பொருளாதார வசதிகள் கிடையாது.

அந்த வகையில், தனது தாயை கவனித்துக்கொள்ள கபிலன் தன்னால் முடிந்ததை செய்து வருகிறான். ஆனால், இப்போது அவனது உயிரையே காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. 11 வயதில் இருக்கும் சிறுவர்கள் எந்த அளவுக்கு ஆக்டிவாக இருப்பார்களோ, அந்த அளவுக்கு கபிலனால் இருக்க முடியவில்லை. அடிக்கடி உடல் நலப் பிரச்சனை, சுவாச கோளாறு, நெஞ்சு வலி போன்றவற்றால் கபிலன் கடந்த சில நாட்களாக துடித்து வந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் சென்று பரிசோதித்தபோது, கபிலனுக்கு இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் இதனை ருமாட்டிக் இதய நோய் என்று குறிப்பிடுகிறார்கள். இதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், இப்போது குடும்பத்திற்காக கபிலனின் பாட்டிதான் வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இதில் வரும் சொற்ப வருமானத்தை கொண்டு இதய நோயை சரி செய்துவிட முடியாது.
அறுவை சிகிச்சை, மருந்து மாத்திரைகள் என ரூ.3.25 லட்சம் செலவாகும். இவ்வளவு பெரிய தொகையை மாத ஊதியம் வாங்குபவர்களால் கூட உடனடியாக ஏற்பாடு செய்துவிட முடியாது. ஆனால் நீங்கள் நினைத்தால் கபிலனின் உயிரை காப்பாற்ற முடியும்.
எல்லா நல்ல செயல்களுக்கும் ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. மற்றவர்கள் கொடுக்கும் வரை காத்திருக்காமல் உடனே, முடிந்த உதவியை செய்யுங்கள். சிறு தொகையும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications