என்.எல்.சி விவகாரம்.. தமிழ்நாடு அரசு எதுவும் கோரவில்லை.. அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்
கடலூர்: என்.எல்.சி நடவடிக்கைகளை திரும்ப பெற தமிழ்நாடு அரசு இதுவரை எதுவும் கோரிக்கை முன்வைக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு 3 திறந்தவெளி சுரங்கங்கள் அமைத்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சார உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது நிலக்கரி தட்டுப்பாட்டால் 2-வது சுரங்க விரிவாக்க பணியை என்.எல்.சி. நிர்வாகம் விரைவுபடுத்தியுள்ளது.

அதன்படி, சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி, ஆதனூர், மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில் முன்பே கையகப்படுத்திய நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள என்.எல்.சி முடிவு செய்தது. ஆனால், இந்த விளைநிலங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்திருந்தனர். விளைச்சலுக்கு தயாராக இருந்த பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து புதிய பரவனாற்றுக்கு வாய்க்கால் வெட்டும் பணியை என்.எல்.சி நிர்வாகம் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற என்.எல்.சி. அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் 20 போலீசார் காயமடைந்தனர். இதனால், கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 28-ந் தேதி என்.எல்.சி. அலுவலகத்தை பா.ம.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. அன்றைய தினம் மட்டும் வாய்க்கால், சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு நேற்று முன்தினம் முதல் என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணி மீண்டும் தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் கால்வாய் வெட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பரவனாறு கால்வாய் அமைக்கும் பணி முக்கியமானது என்று என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், என்.எல்.சி நிலம் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது. இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று மாநிலங்களவையில் எம்.பி அன்புமணி ராமதாஸ் , மத்திய அரசிடம் கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, என்.எல்.சி நடவடிக்கைகளை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு இதுவரை எதுவும் கோரவில்லை என்று பதில் அளித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications