உன்னை கல்யாணம் செய்துக்கணுமா.. அப்படின்னா நிர்வாண போட்டோ அனுப்பு.. விபரீத காதலன்.. தூக்கிய போலீஸ்
கடலூர்: "உன்னை கல்யாணம் செய்துக்கணுமா... அப்படின்னா உன் நிர்வாண போட்டோக்களை என் செல்போனுக்கு அனுப்பு" என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஆலம்பாடி பகுதியை சேர்ந்தவர் கலையரசன்.. 24 வயதாகிறது.. கடலூரில் தனது அக்கா வீட்டில் தங்கி இருந்தார்.

மேலும் அங்குள்ள ஒரு செல்போன் கடையிலும் வேலை பார்த்து வந்தார்.. அதே செல்போன் கடையில் 22 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. 3 வருடமாக காதலித்தனர்.
சம்பவத்தன்று கலையரசன் தன் அக்கா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, காதலியை அழைத்து சென்றுள்ளார்.. நீதான் என் உயிர், உன்னைதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்லி, அந்த வீட்டிலேயே பலாத்காரமும் செய்துள்ளார்.
இதன்பிறகு 2 பேரும் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலையில் சேர்ந்தனர். அந்த சமயத்தில் திருமண பேச்சை காதலி எடுத்தார்.. அதற்கு "கல்யாணம் செய்ய வேண்டுமானால், உன்னுடைய நிர்வாண போட்டோவை எனக்கு செல்போனில் அனுப்பு" என்று கேட்டுள்ளார்.
ஏற்கனவே ஆசைவார்த்தையால் தன்னையே இழந்த காதலியும், நிர்வாண போட்டோவை கலையரசனுக்கு அனுப்பினார். ஆனால் இன்னும் நிறைய நிர்வாண போட்டோக்கள் வேண்டும் என்று தொடர்ந்துகேட்டு கொண்டே இருந்தார்.
அப்போதுதான் இளம்பெண்ணுக்கு சந்தேகம் வந்தது.. எதற்காக இத்தனை போட்டோக்களை வாங்க வேண்டும் என்று பயந்துவிட்டார்... பிறகு இருவருக்கும் இது சம்பந்தமாக பிரச்சனையும் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கலையரசன், காதலியின் அந்த எல்லா நிர்வாண போட்டோக்களையும் பேஸ்புக்கில் போட்டுவிட்டார்.
இது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கடலூர் மகளிர் போலீசில் புகார் தந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசனை கைது செய்தனர். இப்போது கலையரசன் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications