Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்எல்சிக்கு எதிராக வெடித்த போராட்டம்.. கொளுத்தப்பட்ட டயர்கள்.. நெய்வேலியில் பஸ் கண்ணாடி உடைப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் நெற் பயிர்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை மேற்கொள்ள கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. என்எல்சிக்கு எதிராக நெய்வேலி அருகே கன்னிதோப்பு பாலத்தில் லாரி டயர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுத்து மின்சாரம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது.

Strong opposition to NLC action; govt Bus glass broken in Neyveli

இந்நிலையில் தங்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கேட்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கக் கோரியும் கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சுரங்க விரிவாக்க பணி நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து தண்ணீருடன், மழைநீரும் கலந்து அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தடுக்க என்.எல்.சி சுரங்கத்தில் இருந்து பரவனாற்றுக்கு உபரிநீரை வெளியேற்றுவதற்காக கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக வளையமாதேவி கிராமத்தில் நெற் பயிர் விளையும் ங்களில் 20க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரம் மூலம் வடிகால் வாய்கால் வெட்டும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கி உள்ளது. ஆனால் இன்னும் 30 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு , கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருதாக கூறி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Strong opposition to NLC action; govt Bus glass broken in Neyveli

இந்நிலையில் என்எல்சி விரிவாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாமக, வளையமாதேவி கிராமத்தில் நடந்த சம்பவத்திற்கு பின்னர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த சூழலில் என்என்எல்சிக்கு எதிராக நெய்வேலி பகுதியில் கடும் போராட்டங்கள் நடந்து வருகிறது. சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரி டயருக்கு தீ வைத்து கொளுத்தி சாலையில் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகினர். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டது. இதேபோல் நெய்வேலி அருகே கன்னிதோப்பு பாலத்தில் மர்ம நபர்கள் டயரை கொளுத்திச் சென்றிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு சம்பவங்கள் தவிர, பேருந்து மீது கல்வீச்சு சம்பவமும் நடந்துள்ளது. பண்ருட்டியில் இருந்து காடாம்புலியூர் வழியாக சென்ற அரசு விரைவு பஸ் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மீது கல் வீசி தாக்கி உள்ளனர். பேருந்தில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. கொஞ்சி குப்பம் என்ற கிராமத்தில் அருகே இந்த கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்களை அடுத்து கடலூர் மாவட்டத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Strong opposition to NLC action; govt Bus glass broken in Neyveli

இதனிடையே விளைநிலத்தை அழித்து கால்வாய் அமைக்கும் என்எல்சி நிர்வாகத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டிருக்கின்றன. மக்கள்நலன் காக்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி பகுதியில் உள்ள கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல நூறு ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. அந்த நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பரப்புரை தீவிரம் அடைந்திருப்பதாலும் அது சாத்தியமாகவில்லை. இந்த நிலையில், 2000-க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து வளையமாதேவி பகுதியை சுற்றி வளைத்துள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம், அங்கு 30&க்கும் மேற்பட்ட இராட்சத எந்திரங்களைக் கொண்டு வந்து வேளாண் விளைநிலங்களில் இறக்கி, பயிர்களை சேதப்படுத்தி, அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பது என்பது, குழந்தைகளை கருவில் கொல்வதற்கு இணையான கொடுமையாகும்.

இத்தகையக் கொடுமைகள் உலகில் மக்களாட்சி நடைபெறும் எந்த நாட்டிலும் நடப்பதில்லை. ஆனால், விளைந்த பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு அழிக்கும் கொலைபாதகச் செயலை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் கூலிப்படையைப் போல, உழவர்நலத்துறை அமைச்சர் என்று கூறிக்கொள்ளும் உள்ளூர் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் என்.எல்.சியின் நிலக்கொள்ளைக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுவதை தடுக்க முயன்ற உழவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான உழவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், " கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டிருக்கின்றன. மக்கள்நலன் காக்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி பகுதியில் உள்ள கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல நூறு ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. அந்த நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பரப்புரை தீவிரம் அடைந்திருப்பதாலும் அது சாத்தியமாகவில்லை. இந்த நிலையில், 2000-க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து வளையமாதேவி பகுதியை சுற்றி வளைத்துள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம், அங்கு 30&க்கும் மேற்பட்ட இராட்சத எந்திரங்களைக் கொண்டு வந்து வேளாண் விளைநிலங்களில் இறக்கி, பயிர்களை சேதப்படுத்தி, அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பது என்பது, குழந்தைகளை கருவில் கொல்வதற்கு இணையாக கொடுமையாகும்.

இத்தகையக் கொடுமைகள் உலகில் மக்களாட்சி நடைபெறும் எந்த நாட்டிலும் நடப்பதில்லை. ஆனால், விளைந்த பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு அழிக்கும் கொலைபாதகச் செயலை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் கூலிப்படையைப் போல, உழவர்நலத்துறை அமைச்சர் என்று கூறிக்கொள்ளும் உள்ளூர் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் என்.எல்.சியின் நிலக்கொள்ளைக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுவதை தடுக்க முயன்ற உழவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான உழவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்." என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+