கஷாயம் வைத்தே "கர்ப்பத்தை" காலி செய்த இரக்கமில்லாத பெண்.. மேடம் இப்ப ஜெயிலில்..!
கஷாயம் வைத்து கர்ப்பத்தை கலைத்த மாமியர் கைதானார்
கடலூர்: கஷாயம் வைத்தே ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கி உள்ளார் மாமியார்.. இந்த கொடுமை கடலூரில் நடந்துள்ளது..!
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரை சேர்ந்தவர் சரவணன்.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்..
இவருக்கும் நெய்வேலியை சேர்ந்த நர்மதா என்பவருக்கும் கடந்த வருடம் மே மாதம் கல்யாணம் ஆகியுள்ளது.. நர்மதாவுக்கு 29 வயதாகிறது.. இவர் வன அலுவலராக பணி புரிபவர்.. கல்யாணத்தின்போது, பெண்ணின் பெற்றோர் நிறைய சீர்வரிசை பொருட்களை தந்துள்ளனர்.

வரதட்சணை
ஆனாலும், இன்னும் வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கணவனும், மாமியாரும்.. 25 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கூடுதல் வரதட்சணையாக வாங்கி வரும்படி கேட்டு நர்மதாவை மாமியார் கொடுமைப்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நர்மதா கர்ப்பமானார்... 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் கொடுமைகள் தொடர்ந்துள்ளது.. சம்பவத்தன்று, மாமியார் கஷாயம் வைத்து, அதில் விஷத்தை கலந்து நர்மதாவுக்கு தந்துள்ளனர்.. இதில் கர்ப்பம் கலைந்துவிட்டது.

கஷாயம்
இதற்கு மேல் பொறுக்க முடியாமல், நர்மதா திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார்... அதன்பேரில் சரவணன், மற்றும் அவரின் தாய் மல்லிகா, இவரது மகள்கள் ரேவதி, கவிதா என்கிற பூரணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மல்லிகா, சரவணனை கைது செய்தனர்.. கணவனும், மாமியாரும் இப்போது ஜெயிலில் உள்ளனர்.. நாத்தனார்கள் 2 பேரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடி வருகிறார்கள்.

இந்தியா
இத்தனை காலமும் குறைந்திருந்த வரதட்சணை கொடுமை மீண்டும் இந்தியாவில் தலைதூக்கி உள்ளது.. அதிலும் கடந்த வருடம் கேரளாவையே இந்த பிரச்சனை உலுக்கிஎடுத்துவிட்டது. இத்தனைக்கும் படித்தவர்கள் அதிகம் என்று சொல்லப்படும் இந்த கேரளத்தில் அடுத்தடுத்து 3 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார்கள்.. இவர்கள் எல்லாருமே பட்டதாரிகள்.. இவர்கள் எல்லாருமே 22 வயதை கடக்காதவர்கள்.. இவர்கள் எல்லாருமே வரதட்சணை கொடுமைக்கு ஆளானவர்கள்.

வரதட்சணை
நாடே இதை பார்த்து கொந்தளித்தது.. எனவே, இதனை கருத்தில் கொண்டு அம்மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது... அந்த வகையில் கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.. அத்துடன், வரதட்சணை கொடுப்பதோ, பெறுவதோ சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும், மீறினால், 5 வருடம் ஜெயில், ரூ.15,000 அபராதம் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

கஷாயம்
இங்கே நம் மாநிலத்திலும் இந்த பிரச்சனை தலைதூக்கியது.. டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதுமே, பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தீவிர கவனத்தை செலுத்த சொல்லியிருந்ததாக கூறப்பட்டது.. அதன்படியே பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் எங்கு நடந்தாலும், காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.. இதில் கைதானவர்களுக்கு சிறை தண்டனையையும் விதித்து வருகிறது.. அப்படி இருந்தும் ஒரு பெண், அசால்ட்டாக கஷாயம் வைத்தே கருவை கலைத்துள்ள கொடுமை நடந்துள்ளது.

அதிரடி
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது.. அதில், கலந்து கொண்டு பேசிய முதல்வர், காவல்துறைக்கு சில உத்தரவுகளையும், அறிவுரைகளையும் வழங்கியிருந்தார்.. "சட்டம் - ஒழுங்கு விஷயத்தில், நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்... பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் போன்றவற்றை, அரசு ஒருபோதும் அனுமதிக்காது.. ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.. அந்த வகையில் இன்று நெல்லையில் என்வுண்டரில் அதிரடி காட்டி உள்ள போலீசார், வரதட்சணை விஷயத்திற்கும் முடிவு கட்டுவார்கள் என்று நம்பப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications