"பச்சை துரோகம்".. வளைத்து வளைத்து குழம்பு ஊற்றிய பெண்.. "கள்ளக்காதல்" படுத்தும் பாடு.. மேடம் ஜெயில்ல
கடலூர்: முள்ளங்கி சாம்பாரை ஊற்றி, 3 உயிர்களை பறித்தாரே கீதா.. அவரை பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது.. இதுகுறித்து மேலும் சில தகவல்கள் வெடித்து கிளம்பி உள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளது இலங்கியனூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் வசித்த தம்பதி சுப்பிரமணியன் - கொளஞ்சியம்மாள்.. இவர்களது 40 வயது மகன் வேல்முருகன்..

என்ன நடந்தது:
வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்... மனைவி பெயர் கீதா.. 33 வயதாகிறது.. இவர்களுக்கு அகிலேஷ்வர் என்ற 12 வயது மகனும், சரவணகிருஷ்ணன் என்ற 6 வயது மகனும் உள்ளனர்..
இந்நிலையில், கடந்த 2021 டிசம்பர் 29ம் தேதி, வழக்கம்போல் வீட்டில் கீதா சமையல் செய்து கொண்டிருந்தார்.. முள்ளங்கி சாம்பார் வைத்திருக்கிறார்.. அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிஉள்ளார் கீதா.. சுப்ரமணியன், கொளஞ்சியம்மாள், சரவணகிருஷ்ணன் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர்.. இவர்களுடன் பக்கத்து வீட்டு குழந்தைகள் 8 வயது நித்தீஷ்வரன், 4 வயது பிரியதர்ஷினி என மொத்தம் 8-க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுள்ளனர்.

முள்ளங்கி சாதம்:
ஆனால் வேல்முருகன் மட்டும் சாம்பாரை சாப்பிடவில்லை. ரசத்தை ஊற்றி சாப்பிட்டுள்ளார்... அனைவரும் சாப்பிட்டு முடித்த கொஞ்ச நேரத்தில், கொளஞ்சியம்மாள், சுப்ரமணியன், சரவணகிருஷ்ணன், நித்தீஷ்வரன், பிரியதர்ஷனி ஆகியோருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.. இதனால், ஒவ்வொருவராக மயங்கி விழ தொடங்கினர்.. இதை பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு, கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்..
பிறகு அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மருக்கு மாற்றப்பட்டனர்.. ஆனால், ஜனவரி4ம் தேதி மாமனாரும், ஜனவரி 5ம் தேதி மாமியாரும், ஜனவரி 12ம் தேதி நித்தீஷ்வரன் என்ற சிறுவனும் உயிரிழந்துள்ளனர். இதில் சிறுவர்கள் சரவணகிருஷ்ணன் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 2 பேர் மட்டுமே அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இறந்த 3 பேரின் சடலங்கள் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டு, அந்த ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், 3 பேரின் சாப்பாட்டிலும், எலி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது..
இதற்கு பிறகு, போலீசார் விசாரணையை துவக்கினர்.. இறுதியில்தான் கீதா சிக்கினார். இவர் ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டரின் மகள் ஆவார்.. வேல்முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தபோது, ஹரிஹரன் என்பவருடன் கீதாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இந்த கள்ளக்காதல் விவகாரம் மாமியாருக்கு தெரிந்துள்ளது.. அதனால் மருமகளை கண்டித்துள்ளார்...
கள்ளக்காதலன் யார்:
இதனால் ஆத்திரம் அடைந்த கீதா, சாம்பாரில் விஷம் கலந்து ஊற்றி, இந்த கொலைகளை செய்துள்ளது அம்பலமானது. இதையடுத்து, கீதா போலீஸில் தந்த வாக்குமூலம் தந்துள்ளார்.. அந்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக் தகவல்களையும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்தது கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 29ம் தேதி இரவு ஆகும்.. மாமனார், மாமியாருக்கு மட்டும்தான் சாம்பாரை ஊற்றி கொலை செய்ய கீதா முடிவு செய்திருந்தாராம்.. அதன்படியே மாமனார், மாமியாருக்கு, தட்டில் சோற்றை போட்டு, முள்ளங்கி சாம்பாரையும் ஊற்றியிருக்கிறார்.. அந்த நேரம் பார்த்து பக்கத்து விட்டு சிறுவன் அங்கு வந்துவிட்டானாம்.. சாப்பிடும் நேரத்தில் அந்த சிறுவன் வந்துவிட்டதால், அவனுக்கும் சேர்த்து சாப்பாடு போட சொன்னார்களாம் மாமனாரும், மாமியாரும்.

முள்ளங்கி சாம்பார்:
சாப்பாடு தராமல் போனால் , தன்மீது சந்தேகம் வந்துவிடுமே என்று நினைத்துதான், பக்கத்து வீட்டு சிறுவனுக்கும் அதே முள்ளங்கி சாம்பாரை ஊற்றினாராம்.. இவர்கள் அனைவரும் வீட்டிற்குள் சாப்பிடும்போது, தன்னுடைய பிள்ளைகள் 2 பேருமே வெளியே விளையாட சென்றுவிட்டார்களாம்.. அதனல்தான் அவர்கள் உயிர் தப்பியதாகவும் சொல்கிறார் கீதா.
ஆனால், இந்த சம்பவத்தில் முக்கிய கேள்வி ஒன்று எழுந்துள்ளது.. சம்பவம் நடந்து 3 உயிர்கள் பறிபோனபிறகு, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் உடனடியாக வந்துள்ளது.. அதில் உணவில் விஷம் என்றே சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே, வீட்டில் சமையல் செய்து பரிமாறிய கீதா மீது, வலுவான சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.. அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலமும் தந்துள்ளார்.. அத்துடன், எலி பேஸ்ட்டை வாங்கி தந்தது தன்னுடைய கள்ளக்காதலன் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
வாக்குமூலம்:
ஆனால், இந்த ஒன்றரை வருட காலமாகவே கீதாவையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்யாமலேயே இருந்திருக்கிறார்கள்.. எதற்காக இந்த காலம் தாமதம்? என்று தெரியவில்லையாம். தாய், தகப்பனைஇழந்து, 2 பிள்ளைகளோடு தவித்து வரும் வேல்முருகன், பலமுறை இதை பற்றி முறையிட்டும்கூட, போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இன்னொரு தகவலும் இதுகுறித்து சோஷியல் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இந்த சம்பவம் நடந்தபோது, வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக இருந்துள்ளார் கீதாவின் அப்பா.. அவரது போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தியே மகளை தொடர்ந்து காப்பாற்றி வந்ததாக சொல்கிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில்தான், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஆய்வு மேற்கொண்ட, முதலமைச்சரின் உத்தரவுப்படி, மேற்கண்ட மாவட்டங்களில் ஒருவருட காலமாகவே நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் மீண்டும் கிண்டி எடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் குறித்தெல்லாம் கடலூர் எஸ்பிக்கு, இறுதி அறிக்கை அளிக்க வேண்டும்.. அப்படி அறிக்கை அளிக்காவிட்டால், துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும்..
அதனால்தான், இதற்கு பயந்துகொண்டு, வேறு வழியில்லாமல், ஒன்றரை வருடம் கழித்து கீதாவின் "முள்ளங்கி சாம்பார்" மேட்டரை கையிலெடுத்து, கீதாவை கைது செய்ய வேண்டியதாயிற்றாம்.. எப்படியோ, குற்றவாளிக்கு தண்டனை கிடைத்ததே போதும் என்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications