1984 சீக்கிய கலவரம்.. 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க முடிவு.. உச்சநீதிமன்றம் அதிரடி
1984ம் ஆண்டு ஏற்பட்ட சீக்கிய கலவரம் தொடர்பான 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க, இரண்டு நபர்கள் கொண்ட குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
டெல்லி : 1984ம் ஆண்டு ஏற்பட்ட சீக்கிய கலவரம் தொடர்பான 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க, இரண்டு நபர்கள் கொண்ட குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என் டிங்ரா தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவின் (எஸ்.ஐ.டி.) கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.

டெல்லியில் கடந்த 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய் காப்பாளர்கள் சுட்டு கொலை செய்தனர். இதனால் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் சுமார் 2,800 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பான 241 வழக்குகளை விசாரிக்க, நீதிபதி டிங்கரா மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதில், போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி, 55 வழக்குகளை தவிர, 186 வழக்குகளை விசாரணை நடத்தாமல் முடித்து வைக்கப்பட்டது.
பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா (ஓய்வு பெற்றதில் இருந்து), நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி சந்திரச்சாத் ஆகியோர் சிறப்பு விசாரணை குழுவின் மூன்று உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், விசாரணை நடத்தப்படாமல் முடித்து வைக்கப்பட்ட 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க இரண்டு நபர்கள் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, விரைவில் விசாரணை தொடங்கும் என கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications