இந்தியாவிலும் "கை" வைத்த கூகுள்.. 453 பேரை தூக்கியடித்து.. சம்பள குறைப்பு வேற..கதிகலங்கும் ஊழியர்கள்
ஒருபுறம் பணிநீக்கங்கள் தொடர்ந்தாலும் மறுபுறம் ஊழியர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: கூகுள் நிறுவனத்திலிருந்து சமீபத்தில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது கூகுள் இந்தியாவிலிருந்து சுமார் 453 பேர் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பல்வேறு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து துரத்தி வருகின்றன. கடந்த நவம்பரில் முதன் முறையாக பேஸ்புக் இதற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தது. சுமார் 11 ஆயிரம் பேரை பேஸ்புக் பணிநீக்கம் செய்தது. இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய அளவில் ஊழியர்களை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது இல்லை.
இதனைத் தொடர்ந்து கூகுள், டிவிட்டர், மைக்ரோ சாஃப்ட், ஐபிஎம் என பல்வேறு நிறுவனங்களும் தங்களால் முடிந்த அளவுக்கு பணி நீக்கத்தை மேற்கொண்டன. இதன் விளைவாக அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையை இழந்து தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதில் 30-40 சதவிகிததம் வரை இந்தியர்களாவார்கள். இவர்கள் அனைவரும் H-1B விசாவில்தான் அமெரிக்காவுக்கு சென்றிருக்கின்றனர்.

வேலை இருக்கும் வரைதான் இந்த விசாவுக்கு வேல்யூ. வேலை போய்விட்டால் 6 மாதங்களுக்குள் வேறு வேலையை தேடி விட வேண்டும். இல்லையெனில் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டியதுதான். எனவே அங்குள்ள என்ஆர் இந்தியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த பணிநீக்க நடவடிக்கை வெறும் ஐடி துறை சார்ந்தவர்களை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, ஐடி துறை சார்ந்து இயங்கும் இதர துறைகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது. நிலைமை இப்படி இருக்கையில் தற்போது கூகுள் நிறுவனம் இந்தியாவில் பணி செய்யும் ஊழியர்களையும் வேலையிலிருந்து அனுப்பி வைத்திருக்கிறது.
இந்த செய்தியை பிசினஸ் லைன் உறுதி செய்திருக்கிறது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் சுமார் 453 ஊழியர்களை இந்நிறுவனம் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. கூகுள் இந்தியாவின் தலைவரும், கூகுள் நிறுவனத்தின் துணை தலைவருமான சஞ்சய் குப்தா பணிநீக்கம் குறித்த மெயிலை 453 ஊழியர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். முதல் சுற்று பணிநீக்கத்தின் போது, "நிறுவனத்தின் வளர்ச்சி மந்தமடைந்து வருகிறது. எனவே நிறுவனம் தீர்க்கமான செயல்பாடுகளை நோக்கி செல்ல இருப்பதால் இந்த பணி நீக்கத்தை முன்னெடுக்கிறது" என்று அதன் தலைவர் சுந்தர் பிச்சை கூறியிருந்தார்.

இந்த பணிநீக்க நடவடிக்கைக்கு பின்னர்தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகனை யூடியூபின் புதிய சிஇஓவாக கூகுள் அறிவித்தது. யூடியூப் நிறுவனமும் கூகுளின் ஒரு அங்கம்தான். மிகச்சரியாக சொல்வதெனில் கூகுள், யூடியூப் என சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு தாய் நிறுவனம் ஆல்ஃபாபெட்தான். ஒருபுறம் பணிநீக்கங்கள் தொடர்ந்தாலும் மறுபுறம் ஊழியர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது. தொடர் பணிநீக்கம், சம்பள குறைப்பு, அதிரடி மாற்றங்கள் போன்றவை டெக் ஊழியர்கள் மத்தியில் கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
3.2 கோடி கொசுக்களை ஊருக்குள் விடப் போகும் கூகுள்! பின்னணியில் மெகா ஸ்கெட்ச்! அமெரிக்கா அனுமதிக்குமா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications