டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

76 ஆவது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

Google Oneindia Tamil News

டெல்லி : 76 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார். முன்னதாக முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

Recommended Video

    எல்லா துறையிலும் பெண்கள் தான் முதலிடத்தில் உள்ளனர் - PM Modi *India

    நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடெங்கும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளன.

    பொது இடங்களில் மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசிப்பறக்கின்றன. மூவர்ண அலங்காரங்கள், விளக்குகள் கண்களைப் பறிக்கின்றன. சுதந்திர தினத்தையொட்டி காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். வண்ணமயமான அலங்காரங்களால் ஜொலிக்கிற டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், பல நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    75th Independence day: PM Narendra Modi will hoist the national flag in Redfort

    பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக இன்று சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றுவது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இன்றைய தினம் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 2019-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவின்போதுதான் நாட்டின் முப்படைகளுக்கும் தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

    அது போல் 2020-ம் ஆண்டில், 6 லட்சம் கிராமங்களை கண்ணாடி இழை கேபிள் நெட்வொர்க்கில் இணைக்கிற பணி 1000 நாட்களில் நடைபெறும் என அறிவித்தார். கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது, ரெயில்வே மற்றும் சாலைவழிகள் உட்பட 16 அமைச்சகங்களை ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான 'கதிசக்தி மாஸ்டர்' திட்டத்தையும், 75 வந்தே பாரத் ரெயில்கள் 75 வாரங்களில் இயக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

    எனவே இந்த ஆண்டும் எந்த மாதிரியான திட்டத்தை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

     நாம இப்போ கொண்டாட போறது 75-வது சுதந்திர தினமா? இல்லை 76-வது சுதந்திர தினமா?.. எது கரெக்ட் தெரியுமா! நாம இப்போ கொண்டாட போறது 75-வது சுதந்திர தினமா? இல்லை 76-வது சுதந்திர தினமா?.. எது கரெக்ட் தெரியுமா!

    English summary
    75th Independence day: PM Narendra Modi will hoist the national flag in Redfort. Today all are expecting for Modi's new annoucement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X