90% இந்தியர்களிடம் பணம் இல்லை! விரும்பிய பொருட்களை கூட வாங்க முடிவதில்லை! அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டின் மக்கள் தொகையில் 90% பேர், அதாவது 100 கோடி இந்தியர்களிடம் விரும்பிய பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுவதற்குத் தேவையான நிதி இல்லை என்று வென்ச்சர் கேபிடல் நிறுவனமான ப்ளூம் வென்ச்சர்ஸ் தெரிவித்துள்ளது. நாட்டின் 10% மக்களிடம் மட்டுமே வாங்கும் திறன் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இப்போது ஒரு வளரும் பொருளாதாரமாகவே இருக்கிறது. அதேநேரம் கொரோனாவுக்கு பிறகு நமது நாட்டில் மிடில் கிளாஸ் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் கூறி வந்தனர்.

India economy

ப்ளூம் வென்ச்சர்ஸ் ரிப்போர்ட்

அதாவது பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாக ஆகும் சூழலில், ஏழைகள் மிகவும் ஏழைகளாக மாறி வருவதாக பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் கூறி வந்தனர். இதற்கிடையே பிரபல வென்ச்சர் கேபிடல் நிறுவனமான ப்ளூம் வென்ச்சர்ஸ் நமது நாட்டின் பொருளாதார சூழல் தொடர்பாக முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

90% இந்தியர்களிடம் வாங்கும் சக்தி இல்லை

அதாவது 100 கோடி இந்தியர்களிடம் விரும்பிய பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுவதற்குத் தேவையான நிதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 90% பேரால் விரும்பிய பொருட்களை வாங்க முடிவதில்லை. மறுபுறம் மீதமுள்ள 10 சதவீதம் பேர் மட்டுமே நாட்டில் நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10% என்பது 13-14 கோடி, அதாவது ஒட்டுமொத்த மெக்சிகோ மக்கள் தொகைக்கு இணையானதாகும்.

பணக்காரர்களின் செல்வம் அதிகரிப்பு

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியாவில் நுகர்வோர் வர்க்கமான consuming class விரிவடையவில்லையாம். மாறாகச் செல்வந்தர்கள் மட்டுமே மேலும் மேலும் செல்வம் படைத்தவர்களாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாகப் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும் ஏற்கனவே பணக்காரர்களாக உள்ளவர்களின் சொத்து மட்டுமே அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மேலும் 30 கோடி பேரை எமர்ஜிங் கன்ஸ்யூமர்கள் (emerging consumers) என வகைப்படுத்தியுள்ளனர். இவர்கள் தற்போது தான் அதிகமாகச் செலவு செய்யத் தொடங்கினர். அதேநேரம் தங்கள் செலவுகளில் எச்சரிக்கையாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

குறையும் சேமிப்பு அதிகரிக்கும் கடன்

இந்தியாவில் மக்களிடையே நுகர்வு என்பது குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங்கும் சக்தி மட்டும் குறையவில்லை.. மாறாகச் சேமிப்பும் குறைகிறது.. கடனும் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்பரேட் நிறுவனங்களின் யுக்தியும் மாற தொடங்கியுள்ளன. வெகுஜன மக்களுக்குப் பதிலாக அந்த 10% மக்களைக் குறிவைத்து ப்ரீமியம் பொருட்களை விற்கவே நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணத்தை நாம் ரியல் எஸ்டேட் சந்தையில் பார்க்கலாம்.. அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் 40 சதவீதம் வரை மலிவு விலை வீடுகளே இருந்தன. ஆனால், இப்போது சந்தையில் மலிவு விலை வீடுகள் 18 சதவீதமாக மட்டுமே உள்ளன. மற்ற அனைத்தும் சொகுசு வீடுகளாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வந்தர்களின் ஆதிக்கம்

அதேபோல இந்தியாவில் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு அதிகரித்தே வருகிறது. கடந்த 1990ம் ஆண்டு நாட்டின் தேசிய வருமானத்தில் 34 சதவிகிதம் இந்தியாவின் டாப் 10 சதவிகித பேரிடம் இருந்தது. 2025இல் இது 57.7 சதவிகிதமாக உயர்ந்தது. மற்றும் 1990ல் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவிகிதம் பேரின் வருமானம் என்பது தேசிய வருமானத்தில் 22.2 சதவிகிதமாக இருந்த சூழலில், இப்போது அது 15 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+