டெல்லி தப்லிஜி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ரத்து.. தடுப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர்
டெல்லி: விசா நிபந்தனைகளை மீறி தப்லிகி ஜமாஅத் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, 960 வெளிநாட்டினரை தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அவர்களின் விசாக்களை ரத்து செய்தது.
Recommended Video
இந்த வெளிநாட்டினர் தற்போது வசித்து வரும், மாநிலங்களின் காவல்துறைத் தலைவர்களிடம், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அலுவலகம் கேட்டுக் கொண்டது.

"உள்துறை அமைச்சகம் 960 வெளிநாட்டினரை தடுப்புப்பட்டியலில் பட்டியலிட்டுள்ளது மற்றும் சுற்றுலா விசாக்களில் வரும் போது தப்லீஹி ஜமாஅத் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர்களின் இந்திய விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று உள்துறை அமைச்சர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
21 நாட்கள் லாக்டவுனுக்கு இடையே, இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 250 வெளிநாட்டினர் உட்பட 2,300 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் டெல்லியின் நிஜாமுதீனில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் வசித்து வருவது கண்டறியப்பட்டதை அடுத்து, வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்களில் 300 க்கும் மேற்பட்ட தப்லிகி ஜமாஅத் ஆர்வலர்கள் COVID-19 பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்கப்பட்டனர். இந்த மீட்டிங்கில் பங்கேற்றவர்களால் பல மாநிலங்களில் அதிகமாக கொரோனா பரவியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications