கொரோனாவால் பஞ்சாபில் முதியவர் உயிரிழப்பு.. இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பஞ்சாபை சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பஞ்சாபை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்ததுதான் இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் பலி ஆகும்.
இதையடுத்து மேற்கு டெல்லியைச் சேர்ந்தவர் 69 வயது மூதாட்டி கடந்த 13-ஆம் தேதி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்துக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்பிய இவரது மகன் மூலம் மூதாட்டிக்கு பரவியது.
The total number of positive cases of #COVID19 in India stands at 167 (including 25 foreigners), 4 deaths (1 each) in Delhi, Karnataka, Punjab and Maharashtra: Ministry of Health and Family Welfare pic.twitter.com/sk4rfzvlUE
— ANI (@ANI) March 19, 2020
இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இவர் அண்மையில் துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பியது தெரியவந்தது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவரின் எண்ணிக்கை 3ஆக இருந்தது. தற்போது பஞ்சாபில் முதியவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை மேலும் ஒன்று அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications