தலைமை நீதிபதி மீதான பாலியல் வழக்கை விசாரிக்கட்டும்.. பின் சதியை விசாரிக்கலாம்.. பட்நாயக் முடிவு!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் விசாரித்து முடிக்கப்பட்ட பின்பே அவருக்கு எதிரான சதி குறித்து விசாரிக்கப்படும் என்று ஏகே பட்நாயக் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் விசாரித்து முடிக்கப்பட்ட பின்பே அவருக்கு எதிரான சதி குறித்து விசாரிக்கப்படும் என்று விசாரணை குழு தலைவர் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏகே பட்நாயக் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் வழக்கில் அடுத்தடுத்த திருப்பம் ஏற்பட்டு வருகிறது. 35 வயதாகும் பெண் பாலியல் ஒருவர் ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஜூனியர் பணியாளாக உச்சநீதிமன்றத்தில் இவர் பணியாற்றி வந்தவர். ஆனால் இதை தலைமை நீதிபதி மறுத்து இருந்தார்.

என்ன விசாரணை
இதையடுத்து திடீர் திருப்பமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் புகார் அளித்தார். வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த வழக்கு தற்போது தனியாக விசாரிக்கப்படுகிறது.

விசாரணை குழு
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் தீபக் குப்தா, ரோஹிங்க்டன் நாரிமன் அமர்வு விசாரிக்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது விசாரணை குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

என்ன கூறினார்
ஆனால் பட்நாயக் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் விசாரித்து முடிக்கப்பட்ட பின்பே அவருக்கு எதிரான சதி குறித்து விசாரிக்கப்படும் என்று விசாரணை குழு தலைவர் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏகே பட்நாயக் தெரிவித்துள்ளார். இவருக்கு விசாரணை நடத்த கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை.

என்ன விளக்கம்
இதற்கு தற்போதய பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். அதில், நானும் என்னுடைய விசாரணையை இந்த வழக்கில் நடத்தினால் குழப்பம் ஏற்படும். அதனால் இந்த வழக்கில் பாலியல் புகார் குறித்து முதலில் விசாரணை செய்யட்டும். அந்த விசாரணை முடிந்த பின் நான் சதி தொடர்பான என்னுடைய விசாரணையை தொடங்குகிறேன், என்று கூறியுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications