கெஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள்! பாஜக மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்! அதிரும் தலைநகர் டெல்லி
டெல்லி: டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் ஜெக்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை மெல்ல மெல்ல மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல கடந்த 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இப்போது கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகியிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்,
"அரவிந்த் கெஜ்ரிவால் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அப்படி இருந்தும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை அவர் உட்கொள்கிறார். அவர் தினமும் ஆலு பூரி, மாம்பழம், இனிப்பு வகைகளை அதிகம் உட்கொள்கிறார். மருத்துவ அறிக்கையை காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்காக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார் " என்று கூறியிருந்தனர்.
இதனையடுத்து "இந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், கெஜ்ரிவாலின் உணவு அட்டவணையும் இடம்பெற வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை மெல்ல மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதாவது, டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுக்கப்படுகிறது என்றும், மருத்துவ உதவி மறுக்கப்படுவதால் அவர் மரணத்தை நோக்கி தள்ளப்படுகிறார் என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
"அரவிந்த் கெஜ்ரிவால் இன்சுலின் கேட்டு தனது குடும்ப மருத்துவரிடம் வீடியோ கான்பரன்சிங் செய்து வருகிறார், ஆனால் அவரது கோரிக்கைகளை சிறை நிர்வாகம் நிராகரிக்கிறது. கெஜ்ரிவாலின் மெதுவான மரணத்திற்கு சதி நடக்கிறது" என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். இந்த விவகாரம் தேசிய அரசியலில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications