Meera Mithun: 3 ஆண்டாக டிமிக்கி கொடுத்த மீரா மிதுன்! டெல்லியில் கைதானது எப்படி? இப்ப எங்கிருக்கிறார்
டெல்லி: பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாடல் அழகி, பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் (34) பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதை அவரே வெளியிட்டிருந்தார். இது பார்த்த சமூக ஆர்வலர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மீரா மிதுனையும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கையும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகாமலேயே இருந்தார்.
இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளான நிலையில் அவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இது குறித்து நீதிமன்றம் கேட்ட போது, "மீரா மிதுன் அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருகிறது. இதனால் அவரை கைது செய்ய முடியவில்லை.
அவரது மொபைல் போனும் சுவிட்ச் செய்யப்பட்டுள்ளது" என போலீஸார், நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர். பிடிவாரண்ட் உத்தரவை நிறைவேற்றாததாக போலீஸாரின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இதனிடையே தன் மகளை கண்டுபிடித்து தரக் கோரி மீரா மிதுனின் தாய் ஷியாமளா, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த புகார் குறித்தும் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மீரா மிதுனின் தாய் தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் டெல்லி தெருக்களில் தன் மகள் சுற்றி வருவதாகவும் அவரை மீட்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வாயிலாக, டெல்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தகவல் தெரிவித்து மீரா மிதுனை மீட்க உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ் கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, "டெல்லி போலீஸார் உதவியுடன் டெல்லி சட்ட பணிகள் ஆணைக் குழுவால் மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டெல்லியில் உள்ள மீரா மிதுனை வரும் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications