துருக்கியை தொடர்ந்து.. சீன நிறுவனத்திற்கும் செக்! உறவை முறித்துக்கொண்டது அதானி நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விமான நிலையங்களில் ஓய்வறைகளை மெயின்டெயின் செய்வதற்கு சீனாவின் 'டிராகன்பாஸ்' எனும் நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஆபேரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு துருக்கியின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. எனுவே துருக்கியினுடனான உறவை இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக முறித்துக்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் சீனாவுடனான உறவையும் அதானி முறித்துள்ளது.

Adani china mumbai

இது குறித்து அதானி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "டிராகன்பாஸ் நிறுவனத்துடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இனி இந்நிறுவனம் அதானி நிர்வகிக்கும் விமான நிலையங்களில் லவுஞ்ச் வசதிகளை பயன்படுத்த முடியாது. மற்றபடி சாதாரண பயணிகள் சேவைகள் பாதிக்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விற்பனை மையங்கள், உணவகம், வேகமான செக்-இன் உள்ளிட்ட சலுகைகளை இந்த டிராகன்பாஸ் நிறுவனம் வழங்கி வந்திருக்கிறது. மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூர், ஜெய்பூர், திருவனந்தபுரம், கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களை அதானி பராமரித்து வருகிறது.

கடந்த 2005ம் ஆண்டு சீனாவின் குவாங்சோ நகரத்தில் டிராகன்பாஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது உலகளவில் 700-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் லவுஞ்ச் சேவைகளை வழங்கி வருகிறது. லவுஞ்ச் சேவைகள் என்பது, விமான நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்க, சாப்பிட அல்லது விமானம் வரைக்கும் காத்திருக்க வசதியாக அமைக்கப்பட்ட விரிவான வசதிகளுடன் கூடிய தனித்துவமான மையங்கள் ஆகும்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்தான் இந்நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம் போட்டியிருந்தது. ஆனால் ஏன் ஒரு வாரத்திற்கு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பது பற்றி விரிவான அறிவிப்புகள் இல்லை. ஆனால் ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைளுக்கு சீனா சப்போர் செய்திருக்கிறது என்று பேச்சுகள் இருக்கின்றன. இது பற்றி உறுதியா ஆதாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த சந்தேகத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக பாகிஸ்தானுக்கு ட்ரோன் கொடுத்து துருக்கி உதவியிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, துருக்கி ஏவியேஷன் நிறுவனத்திற்கான செக்யூரிட்டி கிளியரன்ஸை மத்திய அரசு இந்தியாவில் ரத்து செய்திருக்கிறது. எனவே இந்த நிறுவனம் இந்தியாவில் ஏவியேஷன் சேவைகளை மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+