"பாதுகாப்பு துறையில் முதலீடு.. வளர்ச்சிக்கே முன்னுரிமை..! திட்டவட்டமாக சொன்ன கரண் அதானி
டெல்லி: இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு, பாதுகாப்புத் துறையுடன் இணைந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அதானி குழுமம் கவனம் செலுத்தி வருவதாக அந்தக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கரண் அதானி தெரிவித்தார். இதில் பல முக்கிய மாற்றங்கள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) பவள விழா கொண்டாட்டங்களின் போது நடந்த ஒரு கலந்துரையாடலில் கரண் அதானி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது அதானி குழுமத்தின் மூலதன ஒதுக்கீட்டுத் திட்டம் மற்றும் நீண்டகால முன்னுரிமைகள் குறித்து விரிவாகப் பேசினார். அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (APSEZ) நிர்வாக இயக்குநராகவும், அதானி சிமென்ட்டின் இயக்குநராகவும் அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம்
எரிசக்தி உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றில் அதானி குழுமத்தின் வியூகம் மாறியுள்ளது கரண் அதானி கோடிட்டுக் காட்டினார். நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் 2035ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI), கார்பன் எமிஷனை குறைத்தல் மற்றும் தலைமைத்துவ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு அவசியமான எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் முக்கியப் பொருட்கள் ஆகிய மூன்று முக்கிய தூண்களை மையமாக வைத்து தங்கள் விரிவாக்க முதலீடுகள் அமையும் என்று அவர் குறிப்பிட்டார். நகர்ப்புற எரிவாயு விநியோகம், மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பு மற்றும் டேட்டா சென்டர்கள் போன்ற புதிய டிஜிட்டல் சொத்துக்கள் ஆகியவை முக்கிய மையமாக இருக்கும்.
முக்கியம்
அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானியின் மூத்த மகனான கரண் அதானி, பாதுகாப்புத் துறையின் உள்நாட்டு நிறுவனங்கள் என்பது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என வலியுறுத்தினார். பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு (MRO) திறன்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இதில் பிரேசில் விண்வெளி நிறுவனமான எம்பிரேருடன் அண்மையில் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தமும் அடங்கும்.
இந்த ஒப்பந்தம், உள்நாட்டு உற்பத்தி மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை இணைக்கும் ஒரு விரிவான விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். அதானி குழுமம் வேகமாக விரிவடைந்து வருவதால் பல நிர்வாக அடுக்குகள் உருவாகிவிட்டதாகவும், இதனால் முடிவெடுக்கும் செயல்முறைகள் மெதுவாகியுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார்.
முன்னுரிமை
வேகத்தை மீட்டெடுக்கவும், அளவிடும் திறனை மேம்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் நிறுவனக் கட்டமைப்புகளை எளிதாக்குவது தற்போது ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது என்று கரண் அதானி தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, தங்கள் ஊழியர்களின் சராசரி வயதை (தற்போது 38 ஆண்டுகள்) குறைப்பதற்கும் குழுமம் செயல்பட்டு வருகிறது.
இந்த வாரம் அறிவிக்கப்பட்ட, 2035ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயங்கும் உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் 100 பில்லியன் டாலர் முதலீட்டு அறிவிப்பு உடன் இது ஒத்துப்போகிறது. குழுமத்தில் பெண் பணியாளர்களின் பங்கேற்பு 2 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் கரண் அதானி குறிப்பிட்டார்.
சொந்த ஊழியர்கள்
சுமார் 80 சதவிகித தலைமைப் பதவிகள் நிறுவனத்திலேயே வேலை செய்யும் ஊழியர்களால் நிரப்பப்படுவதாகவும், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சிமென்ட் மற்றும் சுரங்கத் தொழில் போன்ற வணிகப் பிரிவுகளுக்கு மத்தியில் ஊழியர்கள் மாற ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒழுங்குமுறை ஆய்வு, நிர்வாகம் மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "வலுவான செயல்பாடுகள் மற்றும் வெளிப்படையான தகவல்தொடர்புகள் எல்லாவற்றுக்கும் பதிலளிக்கும்" என்றார். நிறுவனமயமாக்கல் மற்றும் பரந்த நிர்வாகக் கட்டமைப்புகள் அபாயங்களைக் குறைக்கவும் உதவுகின்றன என்று அவர் கூறினார். சர்வதேச சந்தைகளில் பயனுள்ள தகவல்களின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நிலைத்தன்மை குறித்து பேசிய அவர், சுற்றுச்சூழல் பொறுப்பும் லாபமும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று உறுதிப்படத் தெரிவித்தார். காரபன் எமிஷனை குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதானி குழுமத்தின் கீழ் செயல்படும் துறைமுகச் செயல்பாடுகளில் உள்ள சரக்கு வாகனங்களை இந்த ஆண்டு டீசலில் இருந்து பசுமை எரிபொருள் மாற்றுகளுக்கு மாற்றுவதாக அவர் அறிவித்தார்.
#WATCH | Delhi | Managing Director (MD) of Adani Ports & Special Economic Zone Ltd (APSEZ), Karan Adani says, "Two things that we have noticed as we have scaled, are that we have become slow and quite fat. As a group, we are committed to doing greenfield capex of Rs 2 lakh crore… pic.twitter.com/cOn6bNxGfn
— ANI (@ANI) February 21, 2026
பார்முலா 1 ரேஸ்
கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்த சர்வதேச ரேஸ் டிராக்கை அதானி குழுமம் கையகப்படுத்திய நிலையில், அங்கு மீண்டும் பார்முலா ஒன் பந்தயத்தைக் கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார். எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவின் உள்கட்டமைப்பு திறன்களை வெளிப்படுத்த உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
தனது ஆரம்பக்கால வாழ்க்கை குறித்துப் பேசிய கரண் அதானி, முந்த்ரா துறைமுகத்தில் எந்தச் சிறப்புச் சலுகைகளும் இல்லாமல் களப்பணிகளில் ஈடுபட்டதை நினைவு கூர்ந்தார். அந்த அனுபவம் தனது செயல்பாட்டு அணுகுமுறையையும், தலைமைத்துவக் கண்ணோட்டத்தையும் வடிவமைத்தது என்றார். ஹீரோ என்டர்பிரைஸ் தலைவர் மற்றும் AIMA இன் முன்னாள் தலைவர் சுனில் காந்த் முன்ஜால் இந்தக் கலந்துரையாடலை வழிநடத்தினார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications