கோபப்பட்ட நிர்மலா சீதாராமன்.. சீதாராம் எச்சூரி கொடுத்த “ஐடியா”! விடாத “மோடி புகைப்பட” பஞ்சாயத்து
டெல்லி: ஜி.எஸ்.டி. பில்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை சேர்க்கலாமே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி தெரிவித்து இருக்கிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலத்துக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காமரெட்டி, பான்ஸ்வாடாவுக்கு அவர் சென்றார். அப்போது அங்குள்ள ரேசன் கடை ஒன்றில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பிரதமர் படம்
அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லாததால் கோபமடைந்த அவர், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மாநிலத்தில் பொதுமக்களுக்கு ரூ.1 க்கு ரேஷனில் அரிசி வழங்கப்படுவதில் மத்திய அரசு முக்கிய பங்கும் வகிக்கும் நிலையில் பிரதமரின் படத்தை வைக்காதது ஏன்?'' என கேள்வி எழுப்பினார்.

நிதியமைச்சரின் கோபம்
இதையடுத்து காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலை அழைத்த நிர்மலா சீதாராமன், ‛‛ரேஷன் அரசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் சரியான பதிலை அளிக்காததா நிர்மலா சீதாராமன் அரை மணி நேரத்திற்குள் இதுதொடர்பான விபரங்களை அறிந்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தெலுங்கானா அமைச்சர்
இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ், "நிர்மலா சீதாராமன் பேச்சு நகைச்சுவையானது. தேசிய உணவு விதிகளின் கீழ் 50 முதல் 55% வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு ரேஷன் அரிசு வழங்குகிறது. மீதமுள்ள 45% பேருக்கு தெலுங்கானா அரசு ரேஷன் அரிசி வழங்குகிறது. இதற்காக முதலமைச்சர் படத்தை வைக்கிறோமா?'' என கேள்வி எழுப்பினார்.

பீட்டர் அல்போன்ஸ்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி, "ஜிஎஸ்டி வரி செலுத்தும் ரசீதுகளிலும் பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். மக்கள் வழங்கும் பணத்தை ஒரு தனி நபர் வழங்கும் நிதியாக பேசுவது உண்மைக்கு புறம்பானது. அபத்தமானது. இங்கும் இலவசம் என்று எதுவும் இல்லை. இந்தியாவில் உள்ள அனைவரும் வரி செலுத்தி வருகிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications