துருக்கியை துரத்தியடிக்கும் இந்தியா.. மத்திய அரசு அதிரடியாக செய்த 2 விஷயம்.. செம மூவ்
டெல்லி: பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கிக்கு நம் நாட்டு மக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசும் துருக்கி நிறுவனத்தை துரத்தியடிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு, ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த 7-ம் தேதி நள்ளிரவு முதல் 10ம் தேதி வரை பாகிஸ்தானுக்குள் ஏவுகணை தாக்குதல்களை நம் நாடு நடத்தியது. துல்லிய தாக்குதல் வழியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. அதேபோல் விமானதளம், ராணுவ தளமும் அழிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் நம்மை தாக்க முயன்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இந்த மோதலில் துருக்கி பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தது. நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை துருக்கி கண்டித்தது. அதுமட்டுமின்றி துருக்கி தனது நாட்டு ட்ரோன்களையும், ட்ரோன் ஆபரேட்டர்களையும் பாகிஸ்தானுக்கு வழங்கியது. அவர்கள் தான் பாகிஸ்தானில் இருந்து கொண்டு ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.
இதனால் துருக்கிக்கு எதிராக நம் நாட்டு மக்கள் திரும்பி உள்ளனர். பயங்கரவாதிகளை அரவணைக்கும் பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி செய்ததால் கோபமாகி நம் நாட்டு மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். துருக்கிக்கு சுற்றுலா செல்வது, துருக்கி நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் மேற்கொள்வது உள்ளிட்டவற்றை கைவிட்டுள்ளனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி நம் நாட்டில் செயல்பட்டு வரும் துருக்கி நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தான் இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் துருக்கி ஏர்லைன்ஸின் போயிங் 777எஸ் என்ற 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை குத்தகை பெற்று இண்டிகோ இயக்கி வருகிறது. இந்த விமானங்களின் குத்தகை காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து குத்தகை காலத்தை 6 மாதங்கள் நீட்டிக்க இண்டிகோ அனுமதி கோரியது. ஆனால் விமான இயக்குநரகம் 3 மாதங்கள் மட்டுமே அனுமதி கொடுத்தது. அதோடு அதன்பிறகு எந்த காரணத்தை கொண்டும் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தது. இதன்மூலம் துருக்கி ஏர்லைன்ஸ் உடனான உறவை இண்டிகோ முறித்து கொள்ள உள்ளது.
இதன்மூலம் துருக்கிக்கு மத்திய அரசு பெரிய செக் வைத்துள்ளது. ஏனென்றால் நம் நாட்டில் இருந்து இந்த விமானங்கள்
டெல்லி மற்றும் மும்பையில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு நேரடியாக சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர். தற்போது துருக்கியை நம் நாட்டு சுற்றுலா பயணிகள் புறக்கணித்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்த நம் நாட்டுக்கும் துருக்கிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டால் வருங்காலத்தில் கூட துருக்கிக்கு நம் நாட்டு மக்கள் செல்லலாம். இதன்மூலம் துருக்கி பலன் கொடுக்கலாம். ஏனென்றால் நம் நாட்டில் இருந்து துருக்கிக்கு குறைந்த செலவில் நேரடியாக செல்ல முடியும். இப்போது இந்த சேவையை நிறுத்தி உள்ளதன் மூலம் நம் துருக்கி ஏர்லைன்ஸ்க்கான குத்தகையை இண்டிகோ ரத்து செய்ய உள்ளது. அதோடு துருக்கிக்கு மக்கள் செல்வதையும் குறைக்க முடியும்.
முன்னதாக விமான இயக்குநரகம் துருக்கியின் 'ஸெலெபி ஏவியேஷன்' நிறுவனம் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது. டெல்லி, மும்பை, அகமதாபாத் உள்பட 9 விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பயணியர் சேவைகளை இந்த ஸெலபி நிறுவனம் மேற்கொண்டு வந்தது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஸெலபி நிறுவனத்தின் ஒப்பந்தம் என்பது ரத்து செய்யப்பட்டது. இப்போது இண்டிகோ - துருக்கி ஏர்லைன்ஸ் இடையேயான பந்தம் இன்னும் 3 மாதங்களில் முடிவுக்கு வர உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications