ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கணும்.. மோடி சொன்னதை செய்யணும்.. அதிமுக கோரிக்கை!
டெல்லி: ஐ.நா. மனித உரிமை மனித உரிமை கவுன்சிலில், இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக கூறியுள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்க சீனா, பாகிஸ்தான், ரஷ்யா முடிவு செய்துள்ளன.

இலங்கைக்கு எதிராக தீர்மானம்
இலங்கையில் அந்த நாட்டு அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நீண்ட நாட்களாக நடந்த போர் கடந்த 2009-ல் முடிவடைந்தது. அப்போது பல லட்சம் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர்.இலங்கை ராணுவம் மிக மோசமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் பலமுறை கூறியது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் விசாரணை
ஆனால் இதுபற்றி எதற்கும் செவிசாய்க்காமல் இலங்கை அரசு மவுனம் காத்து வருகிறது. போரின்போது காணாமல் ஆனவர்களின் கதி என்ன? என்பது தொடர்பாகவும் இலங்கை அரசு பதிலளிக்கவில்லை.ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தின் மீது கடந்த 2 நாட்களாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் விவாதம் நடந்து வருகிறது.

அதிமுக கோரிக்கை
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்க சீனா, பாகிஸ்தான், ரஷ்யா முடிவு செய்துள்ளன. அதே வேளையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், எங்களுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என்று இலங்கை கூறுகிறது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக, ஐ.நா. மனித உரிமை மனித உரிமை கவுன்சிலில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கூறியுள்ளது.

மோடி வாக்குறுதிபடி செயல்பட வேண்டும்
இது தொடர்பாக அதிமுக எம்.பி. தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசும்போது கூறியதாவது:- ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். மனித உரிமை மீறல், போர்க்குற்ற தீர்மானத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது கூறினார். தற்போது அதை செய்ய வேண்டும் என்று தம்பிதுரை கூறினார்.
-
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஸ்தம்பித்த டெல்லி.. இனி இளைஞர்கள் பயப்படமாட்டார்கள்.. CJP பதிவால் மத்திய அரசு ஷாக்! -
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications