பர்த்டே பார்ட்டியில்.. எய்ம்ஸ் பெண் டாக்டர் பலாத்காரம்.. சீனியர் அதிகாரிக்கு போலீஸ் வலை
எய்ம்ஸ் பெண் டாக்டர் ஒருவர் சீனியர் டாக்டரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனை பெண் டாக்டர் ஒருவரை, அதே மருத்துவமனையில் பணிபுரியும் சீனியர் அதிகாரி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த விசாரணையை டெல்லி போலீசார் துவங்கி உள்ளனர்.
வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள் அதிகமாகி கொண்டே போகின்றன.. குறிப்பாக பெண்கள் மீதான தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.
இதை அந்தந்த மாநில எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டி ஆளும் கட்சிகளை கண்டித்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம்
எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவரையே பலாத்காரம் செய்துள்ளனர்.. கடந்த செப்டம்பர் 26-ம்தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.. பிறந்தநாள் விழா ஒன்றில் பெண் டாக்டரை, அவரது சீனியர் அதிகாரியே பலாத்காரம் செய்துள்ளது வெளிச்சத்துக்கு தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் வேலை பார்க்கும் சக ஊழியர் ஒருவருக்கு பிறந்தநாள் விழா நடத்தி உள்ளனர்.. அந்த விழாவில் பெண் டாக்டரும், அவருடைய அதிகாரியும் பங்கேற்றுள்ளனர்..

விசாரணை
அப்போது அங்கிருந்த ஒரு அறையில் இந்த கொடுமை நடந்துள்ளது.. ஆனால், விழாவில் கலந்து கொண்டிருந்தவர்கள் யாருமே காப்பாற்ற முன்வராத நிலையில், பெண் டாக்டர் தப்பித்து உயிர்பிழைத்து ஓடியுள்ளார்.. நடந்த தகவல் குறித்து ஹவுஸ்காஸ் போலீசாருக்கு கடந்த 11-ம்தேதி தெரியவந்துள்ளது.. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்..

பாதிப்பு
அப்போதுதான் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழு விவரங்களையும் சொல்லி உள்ளார்.. இதைடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் ஹவுஸ்காஸ் போலீஸார். ஆனால், இந்த விஷயம் தெரிந்து, அதற்குள் சீனியர் அதிகாரி தலைமறைவாகி விட்டார்.குற்றம் சாட்டப்பட்டதாக சொல்லப்படும் அந்த சீனியர், எங்கெல்லாம் செல்வாரோ, அவரது இடங்களில் போலீசார் சோதனையை மேற்கொண்டனர்..

தலைமறைவு
அப்போது சில விவரங்களையும் அங்கெல்லாம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், தேடும் பணி தொடர்கிறது. நேற்றைய தினம்தான், உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார்.. அதில், தன்னுடைய தந்தை உட்பட 26 பேர் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, டிவியில் ஆபாச படங்களை போட்டுக் காட்டி என்னிடம் பெற்ற அப்பாவே தவறாக நடக்க முயன்றார் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்த விசாரணை நடந்து வரும்போது, இன்னொரு சம்பவம் பகீரை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications