பின்தொடர்ந்து.. ஓட்டுக்கேட்டு.. டேப் செய்து! இந்திய "ரா" அதிகாரிகளை உளவு பார்த்த கனடா? ட்ரூடோ அடாவடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு பின் கனடா இந்திய அதிகாரிகளை உளவு பார்த்து இருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. கனடா உளவு பார்த்து அதன் மூலம் சேகரித்த உளவு தகவல்களின் அடிப்படையில்தான் இந்தியாவை குற்றஞ்சாட்டுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஜி 20 மாநாட்டிலேயே கனடா பிரதமர் ட்ரூடோவை சந்திப்பதில் மோடி ஆர்வம் காட்டவில்லை. மாநாடு முடிந்த பின்பே கனடா பிரதமர் ட்ரூடோவுடன் மோடி சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு கூட இனிப்பானதாக இல்லை. தொடக்கத்தில் இருந்தே பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவிற்கும் இடையில் நல்ல உறவு இல்லை. இப்படி இருக்கும் நிலையில்தான் தற்போது இந்தியா மீது கனடா பிரதமர் ட்ரூடோ சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

Allegation against India’s in killing of Khalistani extremists is based on surveillance of Indian diplomats in Canada

என்ன குற்றச்சாட்டு?: காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை இந்திய அரசு கொன்றது என்று ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்து உள்ளதால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். கனடா, பிரதமர் ட்ரூடோ, இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்.

இந்தியா இது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இதில் உண்மையை கொண்டு வர வேண்டும். நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதனால் இந்தியா கனடா இடையிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. கனடா குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் மற்றும் மறுப்பு வெளியிட்டு உள்ளது.

வெளியேற்றம்: இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமர் ட்ரூடோவின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை கனடா வெளியேற்றியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்முறையாக கனடா இந்தியாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியை இப்படி வெளியேற்றி உள்ளது.

இதனால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியாவும் கனடாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியை வெளியேற்றும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

உளவு பார்த்தா?: இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு பின் கனடா இந்திய அதிகாரிகளை உளவு பார்த்து இருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. கனடா உளவு பார்த்து அதன் மூலம்ஸ் சேகரித்த உளவு தகவல்களின் அடிப்படையில்தான் இந்தியாவை குற்றஞ்சாட்டுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் ரா அதிகாரி பவன் குமார் ராய் உள்ளிட்டோரை கனடா உளவு பார்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காலிஸ்தானியுடன் தொடர்புடைய தீவிரவாதத் தலைவரைக் கொன்றதில் இந்தியாவின் பங்கு பற்றிய கனடாவில் குற்றச்சாட்டு உளவு அடிப்படையிலானது என்கிறார்கள். கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை உளவு பார்த்து கனடா சில தகவல்களை திரட்டி இருக்கலாம் என்று AP செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முக்கியமாக கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை நேரடியாக உளவு பார்த்து, அவர்களின் போன்களை டேப் செய்து, இந்த புகார்களை கனடா வைக்கலாம் என்று அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

யார் இவர்?: வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் பவன் குமார் ராய், கனடாவில் உள்ள இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவின்.. அதாவது ரா அமைப்பின் வெளிநாட்டு பிரிவின் தலைவராக இருந்தார் என்று கனடா வெளியுறவு அமைச்சர் அலுவலகம் அடையாளம் கண்டுள்ளது.

பவன் குமார் ராய் 1997-ம் ஆண்டு பஞ்சாப் கேடரின் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். ராய் பஞ்சாபில் காலிஸ்தானி கிளர்ச்சியை நன்கு அறிந்தவர். கனடாவில், ராய் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (R&AW) நிலையத் தலைவர் பதவியை வகித்தார், இது நாட்டில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட உளவுத்துறை பதவியாகும்.

பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, ஹர்தீப் சிங் நிஜாரைக் கொல்ல ராய் மூளையாக செயல்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராய் வெளிவிவகார அமைச்சகத்தில் பணியாளர்களைக் கையாள்வதில் இணைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டத்தில் ராய் உயர் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்று சில ஆவணங்கள் கூறுகின்றன.R&AW இன் முன்னாள் தலைவரான சமந்த் குமார் கோயலுக்கு ராய் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.2018 ஆம் ஆண்டில், MEA ராய் அமைச்சகப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டதாக அறிவித்தது, மேலும் அவர் இந்திய உயர் கமிஷ்னர் பணிபுரிய ஒட்டாவாவிற்கு விரைவில் மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். காலிஸ்தான் விடுதலைக்காக போராடிய இவர் இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான KTF எனப்படும் காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் நிஜ்ஜார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+