காலத்தால் அழியாத கலங்கரை விளக்கம்.. முத்துராமலிங்க தேவரை தமிழில் புகழ்ந்த பிரதமர் மோடி! இதோ விபரம்
டெல்லி: முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி பிரமதர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மொழியில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் முத்துராமலிங்க தேவரின் கொள்கைகள் காலத்தால் அழியாமல் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும் என புகழ்ந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜை என்பது விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வேளையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன்னுக்கு சென்று முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செய்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஆண்டுக்கான முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்தது. அக்டோபர் 28ம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ம் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்றன. அக்டோபர் 30ம் தேதியான இன்றைய தினம் முத்துராமலிங்கத் தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா, 61வது குருபூஜை விழா நடைபெற்றது.

இதையடுத்து இன்று பசும்பொன்னுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் சென்று முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். குருபூஜை விழா அமைதியாக நடந்து முடிந்தது. குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை,…
— Narendra Modi (@narendramodi) October 30, 2023
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ‛‛மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம்.
சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்'' என தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications