பிரதமர் மோடியை சந்திக்கணும்னா.. இனி கொரோனா பரிசோதனையும் அவசியம்
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மோடியை சந்திக்கவுள்ள டெல்லி நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று 2020, 2021 ஆகிய 2 வருடங்களை முடக்கியது. உலக நாடுகளில் இப்போதுவரை கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆரோக்கியத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் ஆறாத ரணமாக மாறியுள்ளது. அந்த பாதிப்புகளே முழுமையாக விலகாத நிலையில், உலகளவில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகளவு இருந்தது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களை போல பெரியளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாவிடினும் பரவல் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் அரசுத் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிததாக 306 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 3 பேரும், கர்நாடகாவில் 2 பேரும், மகாராஷ்டிராவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.
அங்கு புதிததாக 170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் புதிதாக 114 பேரும், கர்நாடகாவில் புதிதாக 100 பேரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மொத்தமாக 2,000 பேரும், குஜராத்தில் 1,223 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இந்தியாவில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் மருத்துவத்துறையில் மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள், படுக்கைகள், போதுமானளவு ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறித்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா ஆர்டி பிசிஆர் சோதனை கட்டாயமாக்கியுள்ளனர். டெல்லி முதலமைச்சர், அந்த மாநில எம்பி, எம்எல்ஏக்கள் ஆகியோருடன் பாஜக நிர்வாகிகள் சுமார் 70 பேர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்தில் வைத்து சந்திக்க உள்ளனர்.
டெல்லி மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் இன்று இரவு தன் இல்லத்தில் சிறப்பு விருந்துக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று சொல்லி பரிசோதனை செய்துள்ளனர். மேலும் மோடியை சந்திக்கும் அனைத்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், பார்வையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வருபவர்கள் மட்டுமே பிரதமர் மோடியை சந்திக்க முடியும். பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications