டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அமித் ஷா அழைப்பு
டெல்லி: டெல்லியில் இன்று(திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,182 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு நாளில் மட்டும் 56 பேர் உயரிழந்துள்ளனர், இதனால் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1327 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் தலைநகரான டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு செல்வதால் நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்க பெட் வசதி அளிக்க முடியாத நிலை இருக்கிறது. இதனை எதிர்கொள்ள மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது டெல்லி அரசு.
இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு டெல்லி கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர், பாஜக நிர்வாகிகள், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications