Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடைசி நேரத்தில் அமித் ஷா சொன்ன மேட்டர்.. உற்று பார்க்கும் அரசியல் கட்சிகள்! பரபரக்கும் பீகார் களம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகாரில் நாளைய தினம் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அடுத்த வாரம் அங்கு 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையே பீகாரில் தேர்தல் களம் எப்படி இருக்கிறது.. எந்தக் கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

பீகாரில் இப்போது நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது. இது தவிர பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது. அங்கு முதற்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது.

Amit Shah Predicts NDA 160 Seats in Bihar 2025 BJP-JD U will strike Equally and defeat INDIA bloc

அமித் ஷா

இதற்கிடையே பிரபல ஆங்கிலச் செய்தி சேனலான இந்தியா டுடேவுக்கு உள் துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தேஜஸ்வி யாதவை மிகக் கடுமையாகச் சாடிய அவர், பீகாரில் வளர்ச்சியை உறுதி செய்ய என்டிஏ அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இத்தேர்தலில் 160+ இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "பீகாரில் சாலைகள், பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணிகளைக் கடந்த 11 ஆண்டுகளாக மேற்கொண்டோம். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைப் பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். இதன் மூலம் பல பெரிய தொழிற்சாலைகள் ஏற்கெனவே மாநிலத்திற்கு வந்துள்ளன" என்றார்.

தேஜஸ்வி

தேஜஸ்வி யாதவ் குறித்துப் பேசிய அமித் ஷா, "யார் இந்த தேஜஸ்வி... அவரா ஆர்ஜேடி தலைவர்? எனக்கு அப்படித் தெரியவில்லை... அவர் பெயருக்கு மட்டுமே கட்சித் தலைவராக இருக்கிறார். தேர்தலில் சீட் வழங்கும் துணிச்சல் கூட தேஜஸ்விக்கு இல்லை.. இப்போதும் லாலு பிரசாத் யாதவ் தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். அவரே ஆர்ஜேடி தலைவர் போலச் செயல்படுகிறார்" என்றார். மேலும், அங்கு ஆர்ஜேடி வெற்றி பெற்றால் மீண்டும் காட்டாட்சி திரும்பிவிடும் என்பதால் மக்கள் கவனமுடன் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

160+ சீட்

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி குறித்த கேள்விக்கு, "இந்தியாவில் 1,550 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. அதில் ஜன் சுராஜ் கட்சியும் ஒன்று, அவ்வளவே..! பீகாரில் மொத்தம் 22 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இருப்பினும், அதில் என்டிஏ கூட்டணிக்கே மக்கள் ஆதரவு இருக்கிறது.. என்டிஏ கூட்டணி நிச்சயம் 160-க்கும் அதிகமான இடங்களைப் பெறும்.. மீதமுள்ள இடங்களில் தான் போட்டியே இருக்கும்" என்றார்.

பீகார்

பீகார் மாநிலத்தில் வரும் நாளை நவம்பர் 6ம் தேதி முதற்கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி மீதமுள்ள 122 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இரு கட்ட தேர்தலைத் தொடர்ந்து, அதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் நவம்பர் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+