பொது சிவில் சட்டத்தை.. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சீக்கிரமே கொண்டு வருவோம்.. அமித் ஷா பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜ்யசபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய அமித் ஷா பேசினார். அப்போது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகப் பேசிய அமித் ஷா, இதில் நேரு மற்றும் இந்திரா காந்தியையும் அவர் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாகவும் அவர் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார்.

நமது நாட்டில் இப்போது பல்வேறு நாடாளுமன்றத்திற்கும் பல்வேறு மாநிலச் சட்டசபைகளுக்கும் தனித்தனியாகத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த "ஒரே நாடு ஒரே தேர்தல்" சட்டத்தைக் கொண்டு வர பாஜக முடிவு செய்தது.

amit shah one nation one election

ஒரே நாடு ஒரே தேர்தல்: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்தது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டக்குழுவுக்கு இது அனுப்பப்பட்டது. அரசியல் சாசனத்தைத் திருத்த பாஜக முயல்வதாக எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கிடையே ராஜ்யசபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய அமித் ஷா, நமது நாட்டை ஒருங்கிணைப்பவர் சர்தார் வல்லபாய் படேல் என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்து தனது பேச்சைத் தொடங்கினார்.. இதன் காரணமாகவே இன்று இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடாக வலுவாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமித் ஷா: தொடர்ந்து பேசிய அமித் ஷா, "இங்கு நமது நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெறாது என்று ஆரம்பத்தில் சிலர் சொன்னார்கள்.. ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான் காணாமல் போனார்கள். பல சர்வாதிகாரிகளின் ஆணவத்தை இந்த அரசியல் சாசனம் நசுக்கியுள்ளது அரசியல் சாசன சட்டத்தை மாற்ற பாஜக முயல்வதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். ஆனால், இது சட்டவிரோதமானது இல்லை.. உண்மையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான ஆப்ஷன் அரசியலமைப்பிலேயே இருக்கிறது. சர்வாதிகாரத்தின் பெருமையை மக்கள் உடைத்துவிட்டனர். சிலருக்கு இந்தியத்தன்மை ஒருபோதும் புலப்படாது.

நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் அப்போது இந்தியாவில் நிச்சயம் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைய முடியாது என்று சிலர் கூறினர். அவர்களுக்கும் அரசியலமைப்பு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இன்று நாம் உலகின் 5வது மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். பிரிட்டனை விடப் பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கிறோம். கடந்த 55 ஆண்டுகளில் காங்கிரஸ் சுமார் 77 முறை அரசியல் சாசனத்தைத் திருத்தியுள்ளது.

நேரு, இந்திரா: உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இருந்த போது பேச்சு சுதந்திரத்தைக் குறைக்க அப்போது காங்கிரஸ் தான் அரசியல் சாசன சட்டத்தைத் திருத்தியது என்பதை நினைவு கூர விரும்புகிறேன். அதன் பிறகு இந்திரா காந்தி கொண்டு வந்த மற்றொரு திருத்தம் மக்களின் அடிப்படை உரிமைகளைக் குறைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கியது" என்றார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தான் எதாவது தவறாகச் சொன்னால் மட்டுமே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று சொல்லிவிட்டு அமித் ஷா தனது பேச்சைத் தொடர்ந்தார். அப்போது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை மேற்கோள் காட்டி பேசிய அமித் ஷா, "எவ்வளவு நல்ல அரசியலமைப்பாக இருந்தாலும், அது யார் கைகளுக்குச் செல்கிறது என்பது முக்கியம். தவறான கைகளுக்குச் சென்றால் அது மோசமாகவே இருக்கும்" என்றார்.

பொது சிவில் சட்டம்: மேலும், பாஜக அரசு நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமித் ஷா, இதேபோல எல்லா மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். மேலும், காங்கிரஸ் அரசு கடந்த காலங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவே இருந்துள்ளதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+