நம்பர் இருந்தா கொடுங்க.. சாலையோர உணவகம் நடத்தும் சிறுவனுக்கு உதவி அளிக்க ஆனந்த் மகிந்திரா முடிவு
டெல்லி: டெல்லியின் திலக் நகர் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையை கவனித்து வருகிறார் 10 வயதே ஆன ஜஸ்பிரித் என்ற சிறுவன். தந்தையின் மறைவிற்கு பிறகு தாய் மற்றும் சகோதரிக்காக சாலையோர கடையில் உழைக்கும் நிலையை கண்டு அந்த சிறுவனுக்கு உதவ பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா முன்வந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தற்போது வித்தியாசமான வீடியோக்கள் மட்டும் இன்றி தன்னம்பிக்கை மிக்க நபர்கள்.. அசாத்திய திறன் கொண்டவர்கள் என கவனம் ஈர்க்கும் நபர்களின் பற்றிய வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில், தற்போது டெல்லியை சேர்ந்த 10 வயது சிறுவனின் வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது.

டெல்லியின் திலக் நகர் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையை 10 வயதே ஆன ஜஸ்பிரித் கவனித்து வருகிறார். ஜஸ்பிரித்திற்கு துணையாக அவரின் சகோதரி உள்ளார். மாமாவின் அரவணைப்பில் இந்த கடையை ஜஸ்பிரித் கவனித்து வருகிறாராம். சமீபத்தில் சிறுவன் ஜஸ்பிரித்தின் தந்தை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து விட்டதால் தனது தாய் மற்றும் 14 வயது அக்காவை காப்பாற்றுவதற்காக அந்த கடையை தானே ஏற்று நடத்துவதாக ஜஸ்ப்ரீத் தெரிவித்துள்ளார்.
சரப்ஜித் சிங் என்ற உணவு ரிவ்யூ செய்யும் நபர் இந்த கடைக்கு சென்றுள்ளார். அவர்தான் அந்த சிறுவனிடம் வீடியோ எடுத்து பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரல் ஹிட் அடித்துள்ளது. சிறுவன் நம்பிக்கையுடன் பேசும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான லைக்குகளை குவித்துள்ளது. 27,000-க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
இந்த வீடியோ பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திராவின் கண்ணிலும் பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடிய ஆனந்த் மகிந்திரா, சிறுவன் வீடியோவை பார்த்ததும் நெகிழ்ந்து போனார். உடனடியாக தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா சிறுவனுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:-
துணிவின் பெயர் ஜஸ்ப்ரீத். எனினும், சிறுவனது கல்வி எந்த வகையிலும் பாதிக்க கூடாது. அவர் டெல்லியின் திலக் நகரில் இருக்கிறார் என கருதுகிறேன். அவரது தொடர்பு எண்ணை யாரேனும் வைத்திருந்தால் பகிரவும். அவரது கல்விக்கு எந்த வகையில் உதவுவது என்பது குறித்து மகிந்திரா அறக்கட்டளை குழு முயற்சி செய்யும்" என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர். குறிப்பாக எக்ஸ் தளத்தில், தனக்கு பிடித்த துணுக்குகள், தன்னம்பிக்கை கதைகள், எளிய பின்னணியில் இருந்து சாதித்த நபர்கள் குறித்த விவரங்கள் என தான் கண்டு, கேட்டு வியந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார்.
ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரல் ஹிட் அடிக்கும். ஆனந்த் மகிந்திராவை எக்ஸ் தளத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். பலரது திறமைகளை பாராட்டுவதோடு பலருக்கும் ஆனந்த் மகிந்திரா உதவியும் செய்து வருகிறார். அந்த வகையில் தான் தற்போது இந்த சிறுவனுக்கும் உதவ ஆனந்த் மகிந்திரா முன்வந்துள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications