Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சு பஞ்சா போச்சே.. விலகாத மர்மங்களும், விடை தெரியாத 4 கேள்விகளும்.. உலுக்கும் உயிர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரெயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு சந்தேகங்கள் இணையத்தில் வெளிவந்தபடியே உள்ளன.
2 பயணிகள் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக, இந்திய ரெயில்வேயின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சர்மா கூறுகிறார்.

என்ன காரணம்: சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ், தடம் புரண்டு சரக்கு ரெயிலில் மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளன. அப்போது, யஸ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. விபத்து நடந்தபோது 2 ரயில்களும் அதிவேகத்தில் சென்றன. மேலும், நேற்று மாலை 6.50 முதல் 7.10 மணிக்குள் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Are these the doubts that arise about the Odisha train crash and What does p Chidambaram say

ஆனால், எதிர்க்கட்சிகள் இதற்கு வேறு காரணங்களை சொல்லி குற்றஞ்சாட்டுகிறார்கள்.. இது இந்தியாவில் நடந்த 3-வது மிகப்பெரிய ரயில் விபத்தாக கருதப்படும்நிலையில், மிகப்பெரிய கண்டனங்களையும் தாங்கி வருகிறது.. இதுபோன்ற பயங்கரமான துயரங்கள் இந்தியாவில் ரயில் பயணத்தில் புதிய இயல்பானதாக மாறுமா? என்றும் கேட்டு வருகிறார்கள்.

தடம் புரண்ட பெட்டிகள்: நாட்டையே உலுக்கும் இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.. மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.. ஒரு பெட்டி மீது இன்னொரு பெட்டி இடித்தும், மோதியும் கொண்டிருந்தன.. பல பெட்டிகள் நொறுங்கி கிடந்தன.. பெட்டிகளின் இடிபாடுகளில் பல உயிர்கள் சிக்கி கிடந்தன.. தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த வண்ணம் இருக்கிறார்கள்.. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கலும், இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளன.. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது..

எனினும், இவைகளை எல்லாம் தாண்டி, இந்த கோர விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனிதத் தவறா? என்ற கேள்விகள் இணையத்தை வட்டமிட்டு கொண்டிருக்கின்றன..

முதல் கேள்வி: 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து என்பதே இதுவரை நடந்தது கிடையாது.. ஒரே இடத்தில், அதுவும் ஒரே நேரத்தில், அதுவும் 3 ரெயில்கள் எப்படி மோதியது என்பதுதான், தேசத்தையே உலுக்கி எடுக்கும் கேள்வியாக உள்ளது..

இரண்டாவது கேள்வி: இந்திய ரயில்வேயில், அனைத்து இடங்களிலுமே சிக்னல்கள் இல்லையா? அல்லது பாதுகாப்பு அமைப்பு இல்லையா? நவீன இந்தியாவில், ரயில்வேயில் உள்ள அடிப்படை வசதிகள் இல்லாதது எப்படி?

மூன்றாவது கேள்வி: முதலில் சரக்கு ரெயில்தான் அங்கு நின்று கொண்டிருந்ததாக சொல்லும்போது, அதே ரெயில்பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பின்னாடியே வந்தது எப்படி? இந்த இடத்தில்தான், தொழில்நுட்பக் கோளாறா? அல்லது மனிதத்தவறா? என்பதை ஆராய வேண்டி உள்ளது.. இந்த முதல் கோளாறுதான்., அடுத்தடுத்த கோளாறுகளுக்கும், மிகப்பெரிய விபத்தாக இது உருவெடுக்கவும் காரணமாக இருந்திருக்கிறது.

Are these the doubts that arise about the Odisha train crash and What does p Chidambaram say

நான்காவது கேள்வி: ரெயில்வே அமைச்சகம் விபத்துகளை தடுப்பதற்கான 'கவாச்' சிஸ்டத்தை செயல்படுத்தி வருகிறது... ரெயில் சிக்னலை தாண்டும்போது, மோதலுக்கான வாய்ப்புகள் இருக்கும் என்றால், முன்கூட்டியே வார்னிங் மெசேஜ் ஒன்றினை அனுப்பும்.. இதனால், எதிரே வரும் ரெயிலை அறிந்து, அந்த டிரைவர் முன்கூட்டியே சுதாரித்து கொள்ள முடியும்.. ஓடிக்கொண்டிருக்கும் ரயிலையும் பிரேக் போட்டு நிறுத்தவும் முடியும்.. இந்த வசதி இருக்கும்போது, எப்படி ரயில்கள் ஒன்றோடொன்று மோதியது?

கவாச் எங்கே: ஆனால், விபத்து நடந்த வழித்தடத்தில் "கவாச்" சிஸ்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என்று ரெயில்வேதுறை செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா விளக்கம் தந்துள்ளார்.. ஆனால், கவாச் (KAVACH) தொழில்நுட்பம் இருந்திருந்தால், ஒடிசா ரயில் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்றே கூறப்படுகிறது.

கடந்த 2022 மத்திய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும்கூட, பொருத்தப்படாமலேயே இருந்திருக்கிறது.. எனினும், இந்த விபத்து எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்பது ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ள விரிவான விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

எனினும், பொதுப்படையான பார்வையில், "இது ஒரு மனித தவறு" என்றே நினைக்க தோன்றுகிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் வேதனையுடன் கூறுகிறார்.

ப.சிதம்பரம்: "இந்த கொடும் நிகழ்வு எதிர்பாரத விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா அல்லது அதிகாரிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டதா என்பதை உடனடியாக இந்திய ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்திட வேண்டும்" என்று சீமானின் கருத்துக்கள் பலம் பெற்று வருகின்றன..

மற்றொருபக்கம் "விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கட்டுமானத் தரமும் உயர்ந்துள்ள காலத்தில் இதுபோல் விபத்துகள் நடப்பது வியப்பளிக்கிறது" என்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்தானது, நாட்டு மக்களின் கவனத்தையும் குவிய செய்து வருகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+