Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாணவேடிக்கை.. ஒளி விளக்குகளால் அலங்கரிப்பட்ட போர் கப்பல்கள்.. கொரோனா வீரர்களுக்கு மாஸ் சல்யூட்!

நாடு முழுக்க கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று இரவு கடற்படை மூலம் ஒளி விளக்குகள் ஏற்றி மரியாதை செய்யப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுக்க கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடற்படை மூலம் ஒளி விளக்குகள் ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. அதே சமயம் நாடு முழுக்க உள்ள முக்கியமான மருத்துவமனை மீது மலர்களால் தூவப்பட்டது..

Recommended Video

    கொரோனாவுக்கு சிகிச்சை...மருத்தவர்களுக்கு ராஜ மரியாதை..

    நாடு முழுக்க கொரோனாவிற்கு எதிராக மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் கடுமையாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு இந்தியாவின் முப்படைகள் மரியாதை செலுத்தியது இதற்கான விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்பட்டது.

    Armed force salute to Corona Warriors: Indian navy will lit up lights in the night to salute

    விமானப்படை மரியாதை அணிவகுப்பு டெல்லியில் ஏற்கனவே தொடங்கியது.. அதேபோல் நாடு முழுக்க கப்பற்படையில் நேற்று இரவு விளக்குகள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கவிடப்பட்டது. கடல் பகுதிகளில் கடற்படையின் 46 ஐசிஜி கப்பல்கள் அணிவகுப்பை நடத்தப்பட்டது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சைரன்கள் ஒலிக்க, பட்டாசுகள், வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டது.

    இதற்கான ஒத்திகை நேற்று முன்தினம் செய்யப்பட்டது. அந்த ஒத்திகையில் வீடியோக்கள் கண்ணை கவரும் வகையில் உள்ளது. வணவேடிக்கையுடன் திருவிழா போல இந்த ஒத்திகை நடந்தது. நேற்று நாடு முழுக்க 25 இடங்களில் இந்த மரியாதை செய்யப்பட்டது மொத்தம் 7516 கிலோ மீட்டர் கடல் பகுதியில் நேற்று இரவு இந்த மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு இரவு 7.30 மணி முதல் 11.59 மணி வரை நடந்தது.

    போர்பந்தர், ஓகா, ரத்தினகிரி, தஹானு, முருட், கோவா, மங்களூர், கவரத்தி, காரைக்கால், சென்னை, கிருஷ்ணபட்டினம், நிசாம்மாபட்டினம், புதுச்சேரி, காக்கிநாடா, பர்தீப், சாகர் தீவு, போர்ட் பிளைர் தீவு, திகில் பூர் தீவு, ஹட் பே, கேம்பெல் பே ஆகிய இடங்களில் இந்த கடற்படை அணிவகுப்பு நடந்தது.

    Armed force salute to Corona Warriors: Indian navy will lit up lights in the night to salute

    கோவாவில் உள்ள கடற்படை தளத்தில் கொரோனா பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமான மனித சங்கிலியும் நேற்று இரவு நடந்தது. இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானங்களும் இதில் கலந்து கொண்டன. கோவா, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் காலை 10-10.30 க்கு இந்த மலர்கள் தூவப்பட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+