'தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது ஏன்'.. உச்ச நீதிமன்றம் எழுப்பிய ஒற்றை கேள்வி தான் திருப்புமுனை
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21-ந்தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்வர் கைது செய்யப்பட்டது அதுவே முதல்முறையாகும். மேலும் ஒருவர் முதல்வராக இருக்கும் போதே சிறையில் இருந்ததும் இதுவே முதல்முறையாகும். கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவர் உச்சச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் தனது கைது நடவடிக்கையே தவறு.. சட்டவிரோதம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்தார்.

கெஜ்ரிவால் மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி 10-ந்தேதி (இன்று) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் அறிவித்திருந்தது .
முன்னதாக சரியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்... அவர் வாடிக்கையாகக் குற்றம் செய்பவர் அல்ல... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அவருக்கு ஏன் நாங்கள் ஜாமீன் வழங்கக்கூடாது?' என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு நேற்று பதில் அளித்த அமலாக்கத்துறை, " எத்தனையோ அரசியல்வாதிகள், சிறையில் இருந்தபடி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். அதற்கு முன்னுதாரணங்கள் பல இருக்கின்றன. சில அரசியல்வாதிகள் சிறையில் இருந்தபடி தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக எந்த அரசியல்வாதிக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது கிடையாது. அவர் வேட்பாளராக இருந்தாலும்கூட ஜாமீன் கொடுக்கப்பட்டது இதுவரை நடந்தது இல்லை.
தேர்தல் பிரசாரம் என்பது அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 123 தேர்தல்கள் நடந்துள்ளது. நமது நாட்டில் ஆண்டு முழுவதும் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். இப்படியே தேர்தல் பிரசாரத்துக்காக இடைக்கால ஜாமீன் வழங்கினால், அரசியல்வாதிகள் யாரையும் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க முடியாத நிலை ஏற்படும். தேர்தல் பிரசார அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும்" என்று கூறியிருந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி, இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ஜூன் 2ம்தேதி சரண் அடைய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அதேநேரம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், முதல்வராக அலுவல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது. இந்த வழக்கு சம்பந்தமாக எதுவும் வெளியில் பேசக்கூடாது.சாட்சிகளை ஆதாரங்களை கலைக்கக்கூடாது என்று கூறியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக ஏன் அவரை கைது செய்யவில்லை? தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்த பிறகு கூட கைது செய்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் கைது செய்ததால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விதான் இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்க காரணமாகி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications