Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடை பெறும் அசோக் கெம்கா ஐஏஎஸ்.. நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்.. 34 ஆண்டில் 57 முறை டிரான்ஸ்பர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேரான மரங்கள் எப்போதும் முதலில் வெட்டப்படும் என்ற கூற்றை உறுதி செய்யும் வகையில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஹரியானா மாநிலத்தில் பணியாற்றினார். அவர் தான் அசோக் கெம்கா ஐஏஎஸ். ஹரியானாவின் மூத்த ஐஏஏஸ் அதிகாரியான இவர், கடந்த 34 ஆண்டுகளில் 57 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதாவது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் இறுதியாக இன்றுடன் ஒய்வு பெறுகிறார்.

1965 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர் கெம்கா. இவர் ஐஐடி கரக்பூரில் (1988) கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் இளங்கலை தொழில்நுட்பப் பட்டம் பெற்றார். பின்னர் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (TIFR) கணினி அறிவியலில் முனைவர் பட்டமும், வணிக நிர்வாகம் மற்றும் நிதித்துறையில் சிறப்புப் பட்டமும் பெற்றார்.

Ashok Khemka IAS retires today Transferred 57 times in 34 years

ஐஏஎஸ் தேர்வு எழுதி வென்ற கெம்கா, 1991ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானார். அதன்பிறகு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டத்தையும் பெற்றார். அதன்பிறகு ஹரியானா மாநில கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா இன்றுடன் ஹரியானா மாநில போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெறுகிறார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அக்கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தொடர்புடைய குருகிராம் நில ஒப்பந்த ஊழலைக் கண்டறிந்து, அதன் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். இதன் மூலம் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். அதற்கு முன்பும் அவர் ஹரியானா மாநிலம் வரை தான் தெரிந்தார். ராபர்ட் வதேரா மீதான நடவடிக்கைக்கு பிறகே இந்தியா முழுதும் பேசப்படும் ஐஏஎஸ் அதிகாரியானார்

அசோக் கெம்கா ஊழலுக்கு எதிராக 1991ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 34 ஆண்டு பணிக் காலத்தில் 57 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சராசரியாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவில் உள்ள எந்தவொரு அதிகாரியும் இந்த அளவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டதே இல்லை.

இதுவரை நான்கு முறை ஹரியானா மாநில அரசின் ஆவணக் காப்பகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதில், மூன்று முறை பாஜக ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சொல்கிறார்கள். இறுதியாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஹரியானா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டருக்கு ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், "ஊழல் தடுப்புப் பிரிவில் எனக்கு பொறுப்புகள் வழங்கினால், ஊழலுக்கு எதிரான உண்மையான போர் நடத்தப்படும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தப்ப முடியாது என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் அடிக்கடி பணியிட மாறுதல் செய்யப்பட்டதுதான் நடந்தது. அவருடைய சக நண்பர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் பலருக்கு கிடைத்த முக்கியமான துறைகள் எதுவுமே கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமல்ல, பாஜக ஆட்சியிலுமே அசோக் மெக்மா அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டபடி தான் இருந்தார்.

இதுதொடர்பாக பதிவிட்டிருந்த கெம்கா, "நேரான மரங்கள் எப்போதும் முதலில் வெட்டப்படுகின்றன. எந்த வருத்தமும் இல்லை, புதிய உறுதியுடனும் விடாமுயற்சியுடன் இருப்பேன்" எனக் கூறியிருந்தார். 34 வருடங்களில் 57 முறை என்பதை கணக்கிட்டு பார்த்ததால் இவரை போல் இந்தியாவிலேயே அதிக பணியிட மாறுதலுக்குள்ளான ஐ.ஏ.எஸ். அதிகாரி இருப்பார்களா என்பது சந்தேகம் என்கிறார்கள்.

இவரது நேர்மைக்கு இவருடைய பணியிட மாற்றங்களே சாட்சி என்கிறார்கள் ஹரியானா இளைஞர்கள். பிழைக்க தெரியாத மனிதர்கள் என்று சக அதிகாரிகளால் விமர்சிக்கப்பட்டாலும் நேர்மையான மனிதர் என்ற பெயருடன் அசோக் கெம்கா ஏப்ரல் 30ம் தேதியான இன்றுடன் ஓய்வுபெறுகிறார். இனி அவருக்கு டிரான்ஸ்பர் என்பதே இல்லை.. இங்கு வாழ்க்கையில் எந்த சந்தர்ப்ப சூழலிலும், சலனப்படாமல் நேர்மையாக இருப்பதே மிகப்பெரிய வெற்றித்தான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+