'முதல் இலக்கு 2030.. அடுத்த இலக்கு 2070..' கிளாஸ்கோ மாநாட்டில்.. அனல் பறந்த பிரதமர் மோடியின் பேச்சு
டெல்லி: கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கு நமது வாழ்க்கை முறையும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, . சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை நாம் அமைத்துக் கொள்ள முன் வர வேண்டும் என்றார். மேலும், பருவநிலை மாற்றத்தின சவாலைச் சமாளிக்கப் பஞ்சாமிர்தம் என்ற ஐந்து முக்கிய உறுதிமொழிகளையும் அவர் வழங்கினார்.
Recommended Video
ஜி20 கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, 2022-ம் ஆண்டுக்குள் இந்தியா 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்றார்.
அங்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

கிளாஸ்கோ மாநாடு
அதன் பிறகு பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி கிளாஸ்கோ நகருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . மேலும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனையும் சந்தித்துப் பேசினார். கிளாஸ்கோ மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றத்தின சவாலைச் சமாளிக்கப் பஞ்சாமிர்தம் என்ற ஐந்து முக்கிய உறுதிமொழிகளை வழங்கினார்.

பிரதமர் பேச்சு
கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதில் பாரிஸ் மாநாட்டின் உறுதிமொழிகள் நிறைவேற்றும் ஒரே நாடு இந்தியா தான். இதுவரை காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடி நாம் அறிவித்துள்ள நிதி போதுமானதாக இல்லை. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் டாலரை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அளிக்க வேண்டும். அதேபோல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் நாடுகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

வாழ்க்கை முறை
உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் தான் வசிக்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களில் 5 சதவீதம் மட்டுமே இந்தியாவில் இருந்து வெளியாகிறது. காலநிலை மாற்றத்திற்கு நமது வாழ்க்கை முறையும் முக்கிய காரணம் என்பதை உலகம் இப்போது ஒப்புக்கொள்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் இலக்கு
என்னைப் பொறுத்தவரை, பாரிஸ் உச்சி மாநாடு வெறும் மாநாடு மட்டும் அல்ல. ஒரு உணர்வு, அர்ப்பணிப்பு. அங்கு இந்தியா உலக நாடுகளுக்கு வாக்குறுதிகளை அளிக்கவில்லை. மாறாக, 125 கோடி இந்தியர்கள் தங்களுக்கே வாக்குறுதிகளை அளித்தனர். 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே கார்பன் வெளியேற்றத்தைப் பூஜ்ஜியம் ஆக்கும் இலக்கை கொண்டுள்ளது.. மேலும் எல்இடிகளைப் பயன்படுத்தி 40 பில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தியா போன்ற வளரும் நாடு கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
|
5 வாக்குறுதிகள்
இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்தின் சவாலை சமாளிக்கப் பஞ்சாமிர்தம் என்ற ஐந்து முக்கிய உறுதிமொழிகளைப் பிரதமர் மோடி அளித்தார்.
2070க்குள் இந்தியா நிகர கார்பன் உமிழ்வைப் பூஜ்ஜியம் ஆக்கும்.
2030-ஆம் ஆண்டில் புதுப்பிக்க எரிசக்தித் திறனை 500 கிகாவாட்டாக அதிகரிக்க இந்தியா உயர்த்தும்.
2030-க்குள் இந்தியா தனது பொருளாதாரத்தின் கார்பன் சார்பை 45 சதவீதமாகக் குறைக்கும்
2030-க்குள் இந்தியா தனது மின் தேவையில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும்
2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது கார்பன் உமிழ்வில் 1 பில்லியன் டன் அளவைக் குறைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications